அமேசான் 2024: ப்ரைம் வீடியோவின் புது வெளியீடுகள்
ப்ரைம் வீடியோ, 2023 ஆம் ஆண்டை மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 2024 இற்கான, கிட்டத்தட்ட 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது ப்ரைம் வீடியோ. அவற்றில் பெரும்பாலானவை அடுத்த 2 ஆண்டுகளில் வெளியிடப்படும். 40 ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 29 திரைப்படங்களுடன் கூடிய இந்தப் புதிய பட்டியல் இந்தியாவின் தலைசிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கு உத்திரவாதமளிக்கிறது. வெளியிடப்படவிருக்கும் நிகழ்ச்சிகளின் தலைப்புக்கள் குறித்த விவரங்கள்:ப்ரைம் வீடியோவின், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் ஹெட் ஆப் ஒரிஜினல்ஸ், அபர்ணா புரோஹித், "பிரைம் வீடியோவில், மொழியியல் மற்றும் புவியியல் எல்லைகளுக்கும் அப்பால் பயணிக்கும், ஒரு மாறுபட்ட, உண்மையான ...