Shadow

Tag: அபியும் அனுவும் திரைப்படம்

அபியும் அனுவும் – 22 வருடங்களுக்குப் பின்

அபியும் அனுவும் – 22 வருடங்களுக்குப் பின்

சினிமா, திரைச் செய்தி
அபியும் அனுவும் எனும் படத்தை தமிழிலும் மலையாளத்திலும் ஒரே சமயத்தில் இயக்கியுள்ளார் பி.ஆர்.விஜயலக்ஷ்மி. இவர் இயக்குநர் பி.ஆர்.பந்தலுவின் மகளென்பது குறிப்பிடத்தக்கது. 1995இல், “பாட்டு பாடவா” எனும் படத்தை இயக்கியுள்ள பி.ஆர். விஜயலக்ஷ்மி இயக்கும் இரண்டாவது படம் ‘அபியும் அனுவும்’. ஆனால் விஜயலக்ஷ்மி, 1985 இல் வெளியான பாக்கியராஜின் ‘சின்னவீடு’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகவே திரையுலகில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. “விஜயலக்ஷ்மி அவர்களின் படத்தில் வேலை செய்தது எனக்குப் பெருமையாக இருந்தது. ரொம்பவே வெளிப்படையாக பேசக்கூடிய இயக்குநர். படத்தில் இரண்டு பாடல்கள் தான். கதையைச் சொல்லும் அந்த இரண்டு பாடல்களையும் திரைக்கதையில் சிறப்பாகப் பொருத்தியிருக்கிறார். டோவினோ, தமிழ் சினிமாவில் இளம் பெண்களின் கனவு நாயகனாக வருவார்” என்றார் இசையமைப்பாளர் தரண். “விஜயலக்ஷ்மியுடன் எனக்கு நீண்ட கால நட்பு இருந்த...