Shadow

Tag: அபிராமி ராமநாதன்

ஆறாம் திணை – ஃப்ளாஷ்-பேக் இல்லா பேய்ப்படம்

ஆறாம் திணை – ஃப்ளாஷ்-பேக் இல்லா பேய்ப்படம்

சினிமா, திரைச் செய்தி
லக்கி ஸ்டார் எனும் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது 'நான் கடவுள்' ராஜேந்திரனுக்கு. பேய்ப்படமான 'ஆறாம் திணை' படத்தின் நாயகனும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. MRKVS சினி மீடியா சார்பாக ஆர்.முத்து கிருஷ்ணன் மற்றும் வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. பேய்களுக்கும் லாஜிக் உண்டு என்ற கருவோடு, முதல்முறையாகப் பேய்களுக்கு ஃப்ளாஷ்-பேக்கும் வைக்காமல் கதையைக் கொண்டு சென்றுள்ளார் இயக்குநர் ஈரோடு அருண்.சி. 'ஆறாம் திணை'க்கு, பேயும் பேய் சார்ந்த இடமும் எனக் கேப்ஷன் அளித்துள்னர்.  கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார்.  முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். ராஜ் கே .சோழன் இசையமைத்துள்ளார். “பேய் உண்மையிலேயே இருக்கு. பணப்பேய், பதவிப்பேய், காமப்பேய், மதப்பேய், ஜாதிப்பேய் என இப்படிப் பல பேய்கள் நமக்குள்ளே...
உதவி இயக்குநரான நாயகி மிஷா கோஷல்

உதவி இயக்குநரான நாயகி மிஷா கோஷல்

சினிமா, திரைத் துளி
நான் மகான் அல்ல, 7ஆம் அறிவு, முகமூடி மற்றும் ராஜா ராணி போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்தவர் மிஷா கோஷல். தற்போது, ‘உன்னோடு கா’ எனும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். நெடுஞ்சாலை புகழ் ஆரி, பால சரவணன், மாயா உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தில் பிரபு மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். R.K. இயக்கி, C.சத்யா இசையமைக்கும் இந்தப் படத்தை தமிழ் சினிமா உலகின் மூத்த தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் மற்றும் அபிராமி மெகா மால் இணைந்து தயாரித்துள்ளனர். "அபிராமி ராமநாதனின் தயாரிப்பில் நடிப்பது என்பது நான் செய்த பாக்கியம். இயக்குநர் ஆர்.கே. புதியவராக இருந்தாலும் ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குநர் போலவே பணியாற்றுகிறார். குறுகியக் காலத்தில் திட்டமிட்டப்படியே படப்பிடிப்பை முடித்து இருப்பதே இதற்கு சான்று. இசையமைப்பாளர் சத்யா அருமையாக இசை அமைத்திருக்கிறார். வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்க...