Shadow

Tag: அப்புக்குட்டி

Valentine’s Day Cheers சொன்ன ”பிறந்தநாள் வாழ்த்துகள்” படக்குழு

Valentine’s Day Cheers சொன்ன ”பிறந்தநாள் வாழ்த்துகள்” படக்குழு

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடிக்கும் "பிறந்தநாள் வாழ்த்துகள்" படக்குழுவினர், காதலர் தினத்தில் தங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மிகவும் வித்தியாசமான முறையில், Valentine's Day Cheers என வெளியிட்டுள்ளனர்!ராஜு சந்திரா எழுதி இயக்கியிருக்கும் "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.இப்படத்தை பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா இருவரும் தயாரிக்க, மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது. மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜா மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மலையாளத்தில் விமர்சன ரீதியாகப் பலரின் பாராட்டுகளை பெற்ற ஜிம்மி இ வீட்டின்ட ஐஸ்வர்யம்' 'ஐ ஆம் ...
அங்காரகன் விமர்சனம் :

அங்காரகன் விமர்சனம் :

சினிமா, திரை விமர்சனம்
மலை கிராமத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு ரெசார்ட் இயங்கி வருகிறது.  அந்த ரெசார்ட்டுக்கு தன் நண்பர்களோடு வந்து தங்கியிருக்கும் ஒரு இளம் பெண் காணாமல் போய்விட்டாள் என்று தேடத் துவங்கும் காட்சியுடன் படம் துவங்குகிறது.  அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையில் அங்கு தங்கி இருப்பவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட, அவர்கள் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்ட, அந்த ரெசார்ட்டில் இன்னொரு பெண்ணும் காணாமல் போயிருப்பது தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து சில அமானுஷ்ய நிகழ்வுகளும் அங்கு நடக்க, முடிவில் என்ன ஆனது, காணாமல் போன பெண்களுக்கு என்ன நடந்தது என்பதே அங்காரகனின் கதை.ரெசார்ட்டில் இரண்டு பெண்களோடு தங்கும் ஒரு இளைஞன்.  இந்த இரண்டு பெண்களில் ஒருத்தி தான் கதையின் ஆரம்பத்தில் காணாமல் போவது.  இவர்கள் சுற்றுலாவிற்கு வந்தவர்கள். ஒரு கணவன் மனைவி ஜோடி, இருவருமே அவர்களுக்குள் இருக்கும் மனஸ்தாபங்களை போக்கி...
காத்திருப்போர் பட்டியல் விமர்சனம்

காத்திருப்போர் பட்டியல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'வெயிட்டிங் லிஸ்ட்' என்பதன் தமிழாக்கமாகத் தலைப்பைப் புரிந்து கொள்ளலாம். படம் இரயில்வே ஸ்டேஷனில், அதாவது இரயில்வே ஸ்டேஷனில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் நிகழ்கிறது. சின்னச் சின்ன குற்றங்களுக்குக் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்காகக் காத்திருக்கின்றனர். காதலைச் சொல்லிவிட்டுப் பதிலுக்காகக் காத்திருப்போரின் பட்டியல் என்றும் தலைப்பிற்கு ஓர் உபப்பொருளை ஒரு பாடலின் வரியில் அளித்துள்ளனர். சத்யாவும் மேகலாவும் காதலிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான நாளன்று தாம்பரம் இரயில்வே போலீஸாரினால் கைது செய்யப்படுகிறான் சத்யா. அவர்களின் காதல் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படம். புதுமையான கதைக்களன், கலவையான கதாபாத்திரங்கள் எனச் சுவாரசியமாகத் தொடங்குகிறது. எனினும் படம், 'தன்னைப் பார்த்து பொதுமக்கள் பயப்பட வேண்டும்' எ...
காகித கப்பல் விமர்சனம்

காகித கப்பல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘காகித கப்பல்’ எனும் தலைப்பு வாழ்க்கையின் நிலையாமையைக் குறிக்கிறது. குப்பை பொறுக்குபவராக வாழ்க்கையைத் தொடங்கி கோடீஸ்வரராகி விடும் சிவபாலன் என்கின்ற அப்புக்குட்டியின் வாழ்க்கையில் நேரும் எதிர்பாராத சம்பவங்கள் தான் படத்தின் கதை. தலைப்பைக் கொண்டே முழுக் கதையையும் யூகித்து விடலாம். அழகர்சாமியின் குதிரை படத்திற்குப் பிறகு, ஹீரோவாக நடித்துள்ளார் அப்புக்குட்டி. அப்புக்குட்டி படிக்காதவர் என்றாலும் நல்ல உழைப்பாளி. ‘பாப்பாம்மாள் வேஸ்ட் பேப்பர் மார்ட்’ மூலம் நன்றாகச் சம்பாதிக்கிறார். அந்தக் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். சுங்க இலாகா விசாரணையின் பொழுது அவமானப்படும் காட்சியில் அவரது அனுபவம் தெரிகிறது. தான் விசாரணைக்குப் போயிட்டு வந்தது குறித்து தன்னிடம் வேலை செய்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் எனக் கேட்கும் பொழுது மிக எதார்த்தமாக கதாபாத்திரத்தின் மனநிலையைப் பிரதிபலித்துள்ளார். அவரது கணக...
அழகர்சாமியின் குதிரை விமர்சனம்

அழகர்சாமியின் குதிரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அழகர்சாமியின் குதிரை - இலக்கியத்தை திரைப்படமாக்கும் முயற்சிகள் தமிழில் அவ்வப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன. தமிழில் அத்தகைய முயற்சியில் தேர்ந்த வெற்றியை 'தில்லானா மோகனாம்பாள்' படம் பெற்றது. தங்கர்பச்சானும் தனது படைப்பான 'ஒன்பது ரூபாய் நோட்'டை திரைப்படமாக இயக்கியுள்ளார். அந்த முயற்சியின் சமீபத்திய நீட்சியாக பாஸ்கர் சக்தி அவர்களின் சிறுகதையான 'அழகர்சாமியின் குதிரை'யை இயக்குநர் சுசீந்திரன் படமாக உருமாற்றியுள்ளார்.ஊரை ரட்சிக்கும் அழகர்சாமிக்கு, திருவிழா எடுத்தால் மட்டுமே மழை பெய்யும் என நம்புகின்றனர் மல்லையாபுரத்து மக்கள். ஆனால் ஊர் எல்லையில் உள்ள கோயில் மண்டபத்தில் இருக்கும் மரக் குதிரை காணாமல் போகிறது. திருவிழா தடைப்படுமே என ஊர் மக்கள் அஞ்சும் நேரத்தில் உயிருள்ள குதிரை ஒன்று ஊருக்குள் வருகிறது. அழகரின் குதிரை தான் அது என மகிழ்ந்து, அக்குதிரையைப் பிடித்துக் கொள்கின்றனர். தனது பொதிக் குதி...