Shadow

Tag: அமிதாப் பச்சன்

வேட்டையன் விமர்சனம்

வேட்டையன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
"மன்னிக்கிறவன் மனுஷன். மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்." - அன்னலட்சுமி, சின்ன கோளாறுபட்டி விரைவான நீதியை அளிக்கும் அவசரத்தில், நிரபராதியை என்கவுன்ட்டர் செய்து விடுகிறார் காவல்துறை கண்காணிப்பாளர் அதியன். நீதிபதி சத்யதேவால், கொலை செய்யப்பட்டவன் நிரபராதி எனத் தெரிந்ததும், உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார் அதியன். ரஜினியிசத்தை மிக கிரேஸ்ஃபுல்லாகத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார் த.செ.ஞானவேல். எனினும் ஜெயிலரின் நீட்டித்த பதிப்போ எனும் தோற்றத்தை எழுப்புகிறது. படத்தை ரசிக்கும்படியாக மாற்றுவது 'பேட்டரி' பேட்ரிக்காக நடித்திருக்கும் ஃபஹத் ஃபாசில் மட்டுமே! ரஜினி போன்ற கரீஸ்மாட்டிக் ஹீரோவையும் சுலபமாக ஓரங்கட்டி விடுகிறார். 'அறிவு திருடனாகுறதுக்குத்தான் வேணும்; போலீஸாக வேணாம்' என அவர் எந்த வசனத்தைப் பேசினாலும் ரசிக்க வைக்கிறது. நீதிபதி சத்யதேவாக அமிதாப் பச்சனைப் படம் நெடுகே வரும் பாத்திரமாக...
‘கல்கி 2898 AD’ திரைப்படத்தில் பைரவாக நடிக்கும் பிரபாஸ்

‘கல்கி 2898 AD’ திரைப்படத்தில் பைரவாக நடிக்கும் பிரபாஸ்

சினிமா, திரைச் செய்தி
மகா சிவராத்திரியின் மங்களகரமான நிகழ்வினைக் கொண்டாடும் வகையில், முன்னணி படைப்பாளி நாக் அஸ்வின் இயக்கத்தில், இதிகாச கதையின் அடிப்படையில் உருவாகும் ‘கல்கி 2898 A.D’ படத்திலிருந்து, ஒரு அற்புதமான அப்டேட் ஒன்றை, தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களின் வழியே, தயாரிப்பாளர்கள், சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் இப்படத்திலிருந்து, முன்னணி நடிகர் பிரபாஸின் கதாபாத்திரத்தின் பெயரை அறிவித்துள்ளனர். ‘கல்கி 2898 A.D.’ படத்தில் 'பைரவா' என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார் பிரபாஸ். ‘பைரவா’வை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, படக்குழுவினர் அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்!. படத்திலிருந்து வெளியான அற்புதமான அப்டேட், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபாஸ் ரசிகர்கள் இணையம் முழுக்க இந்த செய்தியினைப் பகிர்ந்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த ...
தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் விமர்சனம்

தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
அமிதாப் பச்சனும், அமீர் கானும் இணைந்து நடித்திருக்கும் முதல் படம். 300 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட பாலிவுட்டின் மிகப் பிரம்மாண்டமான படம். 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' போல ஒரு இந்தியப் படம் வராதா என்ற ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதாக இருந்தது படத்தின் ட்ரெய்லர். தக்ஸ் என்பது கொலை, கொள்ளையில் ஈடுபடும் கும்பலுக்கு ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். அப்படி இந்துஸ்தானின் விடுதலைக்காகப் புரட்சி செய்யும் ஒரு குழுவிற்கு, தக்ஸ் என முத்திரையிட்டு, அதை அடக்கி ஒடுக்க நினைக்கிறார் ஜான் க்ளைவ் எனும் ஆங்கிலேயர். அது அவருக்குச் சாத்தியமானதா என்பதுதான் படத்தின் கதை. இளவரசி ஜஃபிராவின் கண் முன்பே ஜான் க்ளைவ், அவள் அண்ணன், அம்மா, அப்பா ஆகிய மூவரையும் நம்ப வைத்து, துரோகமிழைத்துக் கொன்று விடுகிறார். பதினோரு ஆண்டுகள் கழித்து தனது வஞ்சத்தை ஜஃபிரா எப்படித் தீர்த்துக் கொள்கிறார் என்பதே படத்தின் முடிவு. நல்லவனாய் வாழப் ப...
அமிதாப் பச்சனின் முதல் தமிழ்ப்படம்

அமிதாப் பச்சனின் முதல் தமிழ்ப்படம்

சினிமா, திரைச் செய்தி
இந்தியத் திரையுலகின் பிதாமகன், அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து தமிழ் வாணன் இயக்கத்ததில் அவர் நடிக்கவுள்ள படத்தின் பெயர் "உயர்ந்த மனிதன்". திருச்செந்தூர் முருகன் ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமன்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படமாக்கப்பட உள்ளது. "ஒரு துணை இயக்குநராகத் திரையுலகில் கால் பதிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பது தான் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம்" என்கிறார் எஸ்.ஜே.சூர்யா. மார்ச் 2019 இல் படப்பிடிப்புத் துவங்க உள்ளது. மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறம...