ரம் விமர்சனம்
அநிருத் இசையமைத்த 13வது படமான ‘ரம்’, ஒரு பேய்ப்படம் என்பது ஒரு சுவாரசியமான ஒற்றுமை. பேய்ப்படங்கள் பார்ப்பதையே தவிர்க்க விரும்பும் அநிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொலை செய்யப்பட்ட ஒரு குடும்பம், பேய்களாக மாறிக் கொன்றவர்களைப் பழி தீர்க்கிறது.
வேலை இல்லா பட்டதாரி படத்தில், தனுஷின் தம்பியாக நடித்த ஹ்ரிஷிகேஷ் (H சைலன்ட் என்பதால் ரிஷிகேஷ் என்றே திரையில் பெயர் வருகிறது) தான் இப்படத்தின் நாயகன். அநிருதின் கஸினும் கூட. படத்தின் நாயகன் என்றாலும், பேய்ப்படத்தில் ‘சென்ட்டர் ஆஃப் அட்ராக்ஷன்’ பேய் தானே! ஆகையால், அவர்க்கு அழுத்தமான அறிமுகமாக இப்படம் அமையவில்லை என்றே தோன்றுகிறது. பேயிடம் சிக்கிக் கொள்ளும் கதாபாத்திரங்களில் அவரும் ஒருவர் என்ற அளவில் மனதில் ஒட்டாமல் போய்விடுகிறார். ‘இவன் முகத்தில ஒரு ரியாக்ஷனும் காட்ட மாட்டான். இவன் கோபப்படுறானா வருத்தப்படுறானான்னே தெரில’ என விவ...