அம்புலி விமர்சனம்
அம்புலி - நிலா என பொருள்படும். இரவில் மட்டுமே தோன்றி உயிர்களை வேட்டையாடும் மிருகம் போன்ற மனிதனைக் குறிக்கும் காரணப் பெயராக தலைப்பை வைத்துள்ளனர். ஸ்டிரியோ-ஸ்கோபிக் முறையில் எடுக்கப்பட்ட முதல் முப்பரிமாண தமிழ்ப் படம் என்பது அம்புலியைப் பற்றிய விசேடமான செய்தி. தேர்வாழி கிராமத்தில் நடந்த விநோதமான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதையின் கருவை அமைத்திருப்பதாக தெரிகிறது.
ஒருவழியாக தனது காதலை இரண்டு வருடங்களிற்குப் பிறகு பூங்காவனத்திடம் சொல்லி விடுகிறான் அமுதன். அவன் காதலைத் தெரிவித்த நாள் முதல் கல்லூரி இரண்டு மாதங்களுக்கு விடுமுறை என்பதால், பணக்கார வீட்டுப் பையனான அமுதன் காதலியைச் சந்திக்க கல்லூரி விடுதியிலேயே தங்க முடிவு செய்கிறான். அதற்கு அமுதன் அவனுடைய நண்பன் பார்வேந்தனின் உதவியை நாடுகிறான். கல்லூரி காவலாளி (வாட்ச்-மேன்) ஆன வேந்தனின் தந்தை வேதகிரி்யும் அமுதன் தங்குவதற்கு சம்மதிக்கிறார். அன்றிர...