Shadow

Tag: அம்மு அபிராமி

Hot Spot விமர்சனம்

Hot Spot விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இயக்குநராகும் முயற்சியில் இருக்கும் ஒருவன், தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாவும் தயாரிப்பாளருமான K.J.பாலமணி மார்பனிடம் கதையைச் சொல்கிறான். மொத்தம் நான்கு கதைகளைச் சொல்கிறான். அவனுக்குப் படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததா, அவனது காதலை அந்தத் தயாரிப்பாளர் அங்கீகரித்தாரா என்பதுதான் படத்தின் கதை. Happy Married Life, Golden Rules, தக்காளி சட்னி, Fame Game என மொத்தம் 4 கதைகள். முதல் மூன்று கதைகளும் கலகலப்பாகச் செல்ல, கடைசிக்கதை மட்டும் மனதைக் கனக்கச் செய்யும் கதையாக முயன்று சமூகத்துக்குக் கருத்து சொல்லியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். ஒரு பெண், ஆணுக்குத் தாலி கட்டினால்? ஆண், சமையலறையில் சிறைப்பட்டால்? ஆண், மாமனாரின் ஏச்சுபேச்சுக்கும் ஆளானால்? ஆண், நண்பர்களைப் பார்க்கச் செல்ல மாமனாரின் அனுமதியை எதிர்பார்க்க நேர்ந்தால்? இதுதான் Happy Married Life-இன் கதை. ஆதித்யா பாஸ்கரின் அதிர்ச்சியாகும் பாவ...
ஹாட் ஸ்பாட் | ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் படம்

ஹாட் ஸ்பாட் | ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் படம்

சினிமா, திரைச் செய்தி
கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே.ஜே.பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹாட் ஸ்பாட்’ ஆகும். வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கே. ஜே. பாலமணி மார்பன், “ஹாட் ஸ்பாட் எங்களுடைய முதல் தயாரிப்பு. விக்னேஷ் நாலு வருடமாகப் பழக்கம். லாக்டவுன் டைமில் ஒரு ஷார்ட் ஃபிலிம் செய்தோம். ‘திட்டம் இரண்டு’ படம் செய்த போதே இப்படத்தின் கதை சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது. ட்ரெய்லர் மிகப் பெரிய அலையை ஏற்படுத்தியுள்ளது. படம் பற்றி நிறையக் கருத்துக்கள் வருகிறது. படம் பாருங்கள் பிடிக்கும். அதன் பிறகு கருத்துச் சொல்லுங்கள்” என்றார். சிக்ஸர...
ஜிகிரி தோஸ்த் விமர்சனம்

ஜிகிரி தோஸ்த் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மூன்று நண்பர்கள். அதில் ஒருவன் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைபவன், மற்றொருவன் தீவிரவாதிகளின் செல்ஃபோன் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் சாதனம் ஒன்றைத் தன் கல்லூரி ப்ராஜெக்ட் ஆகச் செய்துவிட்டு, அது செயல்பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல் போனதை எண்ணி நொந்து போய் இருப்பவன்.  இவர்களுக்கு உதவிக் கொண்டு ஜாலியாகச் சுற்றித் திரியும் மற்றொருவன். இவர்கள், ஒரு பெண்ணை ஒரு கும்பல் கடத்திக் கொண்டு செல்வதைப் பார்க்கிறார்கள்.  மேற்கொண்டு என்ன நடந்திருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா, யூகிக்க முடிந்தால் அது தான் ஜிகிரி தோஸ்த் திரைப்படத்தின் கதை. மிக எளிமையான கதை, அதைவிட எளிமையான திரைக்கதை என ஒரு அடிப்படையான சினிமா தான் ஜிகிரி தோஸ்த். அது தவிர்த்து அதை ஆழமாக அலசிப் பார்ப்பதற்கு வேறொன்றும் இல்லை. மிகக் குறைந்த பட்ஜெட்டில் எவ்வளவு நேர்த்தியாக எடுக்க முடியுமோ அவ்வளவு நேர்த்தியாகப் படத்தை எடுத்திரு...
கண்ணகி விமர்சனம்

கண்ணகி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெண்ணுக்கு தாலி தான் பாதுகாப்பு என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்படும் ஒரு பெண்ணுக்கு அந்த தாலி அவள் எதிர்பார்த்த பாதுகாப்பைக் கொடுக்கவில்லை என்றால் அவளது வாழ்க்கை என்னவாகும் என்கின்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியே “கண்ணகி” திரைப்படத்தின் மையக்கரு. கலை (அம்மு அபிராமி)-க்கு எப்படியாவது ஒரு பெரிய இடத்தில் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று பெரும் சிரத்தையுடன் முயற்சி செய்கிறது கலையின் குடும்பம்.  குழந்தை பிறக்கத் தகுதியில்லை என்பதைக் காரணம் காட்டி வலுக்கட்டாயமாக விவாகரத்து கேட்டு நிற்கும் நேத்ராவின் கணவன் குடும்பம், திருமணமே செட் ஆகாது என்கின்ற எண்ணத்துடன்  லிவிங் டுகெதரில் இருக்கும் நதி கதாபாத்திரம்,  வயிற்றில் கலைக்க முடியாத சூழலில் இருக்கும் நான்கு மாத கருவைக் கலைக்க, தன் காதலனுடன் சேர்ந்து பெரும் போராட்டம் நடத்தும் கீதா கதாபாத்திரம் இந்த நான்கு கதாபாத்திரங்களின் வ...
வான் மூன்று விமர்சனம்

வான் மூன்று விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வான் மூன்று. கவித்துவமான தலைப்பு. படத்தின் தலைப்பே கதையை சொல்கிறது.  காதலில் தோல்வியுற்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு யுவன் யுவதி பார்க்கும் ஒரு வானம்,  40 வருட இல்லற வாழ்க்கையை இனிமையாய் வாழ்ந்து கழித்து வயோதிகத்தை வரவேற்க்கும் தம்பதிகளில் மனைவிக்கு இதய வால்வில் அடைப்பு, அறுவை சிகிச்சைக்கு மகனிடம் இருந்து பண உதவி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் ஏக்க பெருமூச்சுடன் இருக்கும் கணவன், இந்த இணை பார்க்கும் இரண்டாம் வானம், காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து தங்கள் இளமையை இனிப்போடு களிக்க விரும்பிய இணைக்கு குழந்தை வந்துவிட்டதோ என்று பயம், பரிசோதிக்க வந்த இடத்தில் மூளை பாதிப்பு என்று தெரிந்து பயம் கூட, இவர்கள் பார்ப்பது மூன்றாம் வானம்.இவை படத்தின் ஆரம்பக் காட்சிகள். இந்த முதல் பத்தியை படிக்கும் போதே அடுத்த என்ன நடந்திருக்கும் என்று கணித்திருப்பீர்கள்.  படத்தின்...
பாபா பிளாக் ஷீப் விமர்சனம்

பாபா பிளாக் ஷீப் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
புட் சட்னி யூ-டியூப் சேனல் மூலம் பிரபலமான ராஜ்மோகனும், ப்ளாக் ஷீப் யூ-டியூப் சேனல் குழுவினர் மொத்த பேரும் இணைந்து இப்படத்தை உருவாக்கியிருப்பதாலோ என்னவோ மொத்த படமும் ஒரு யூ-டியூப் வீடியோ பார்க்கும் உணர்வையே ஏற்படுத்துகிறது. இப்படத்தை ராஜ்மோகன் இயக்கி ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார். மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை மனதில் வளர்த்துக் கொள்ளக்கூடாது. எதுவாக இருந்தாலும் மனம் விட்டுப் பேச வேண்டும் என்பது தான் பத்தின்ட கரு. ஆனால் இந்தக் கருத்தை சொல்வதற்கான கதையோ, திரைக்கதையோ படத்தில் இருக்கிறதா என்றால் சுத்தமாக இல்லை என்பதே நிதர்சனம். 2k கிட்ஸ்களைச் சந்தோசப்படுத்துவதற்காகவே படம் எடுத்தது போல் இருக்கிறது. அவர்களுக்கு அட்வைஸ் என்றால் பிடிக்காது, சீரியஸ்னஸ் என்றால் ஆகவே ஆகாது, செண்டிமென்ட் என்றால் கிரிஞ்ச் என்பார்கள். அவர்களுக்கு ஜாலியாக இருப்பது மட்டுமே பிடிக்கும். ஆனாலும் அவர்கள் மிகுந்த பொறுப்...
தண்டட்டி – அப்பாத்தாக்களுக்குப் பேத்தியின் அன்பு முத்தம்

தண்டட்டி – அப்பாத்தாக்களுக்குப் பேத்தியின் அன்பு முத்தம்

Trailer, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டட்டி'. ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது. இந்த...
யானை – இயக்குநர் ஹரியின் வேற மாதிரி படம்

யானை – இயக்குநர் ஹரியின் வேற மாதிரி படம்

சினிமா, திரைச் செய்தி
அருண் விஜயும், இயக்குநர் ஹரியும் இணையும் யானை திரைப்படம், ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளது. ட்ரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாகத் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஹரி, “நானும், அருண் விஜயும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இந்தக் கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த வாய்ப்பு அமைய காரணம் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் அவர்கள்தான். இந்தப் படம் பெரிய படம், பட்ஜெட் வகையில் இது அதிகம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வான், அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் கதை. கடந்த 3 வருடங்கள் எனக்கு நிறைய கற்று கொடுத்தது. படத்தைக் கொஞ்சம் வேற மாதிரி எ...