Shadow

Tag: அரவிந்த் ஸ்ரீனிவாசன்

தருணம் விமர்சனம்

தருணம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தேஜாவு இயக்குநரின் இரண்டாவது படமிது. பிரபல நடிகர்களைத் தேடிப் போகாமல், திறமையானவர்களுக்கு வாய்ப்பளித்து, சின்ன பட்ஜெட்க்குள் படம் செய்யவேண்டும் என்று தனக்குத் தானே வரித்துக் கொண்ட விதிக்கு உட்பட்டு இப்படத்தை இயக்கியுள்ளார். புகழ் (PUGAZH) & ஈடன் (EDEN) என்பவர்கள் Zhen ஸ்டுடியோஸ் சார்பாகத் தயாரித்துள்ளனர். எதிர்பாராத் தருணத்தில், திடீரென எழுந்த கோபாவேசத்தில் தலையில் ஒரு அடி அடிக்கப் போய், ரோஹித்தைக் கொலை செய்து விடுகிறாள் மீரா. மீராவிற்கு நிச்சயிக்கப்பட்ட CRPF அதிகாரியான அர்ஜுன், மீராவை எப்படிக் காப்பாற்றுகின்றான் என்பதே படத்தின் கதை. அர்ஜுனின் நண்பன் விஷ்வாவாக வரும் பால சரவணன் படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார். ஆனால், வீட்டில் பிணம் இருக்கும்போது, பாலசரவணனை வைத்து நகைச்சுவை புரிந்தே ஆகவேண்டுமென தருணத்தைக் கவனத்தில் கொள்ளத் தவறவிடுகின்றனர் நாயகனும் நாயகியும். ஆனால், முதற்பாதியில் ஒரு...
தேஜாவு இயக்குநருடன் இணையும் தர்புகா சிவா

தேஜாவு இயக்குநருடன் இணையும் தர்புகா சிவா

சினிமா, திரைத் துளி
தேஜாவு திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கும் திரைப்படத்தை ழென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழும் ஆர்கா என்டெர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர். அஸ்வின் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாசார்ஜி, படத்தொகுப்பாளராக அருள் சித்தார்த் ஆகியோர் ஒப்பந்தம் செயப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 'கிடாரி', 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'முதல் நீ முடிவும் நீ' ஆகிய படங்களில் தனது பாடல்கள் மூலம் முத்திரையைப் பதித்து இசை ரசிகர்களை தன் வசப்படுத்திய தர்புகா சிவா இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் பணியாற்றுவது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும், மேலும் அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரிய பக்கபலமாக அமையுமென்று தயாரிப்பாளர் புகழ் தெரிவித்துள்ளார். இப்படத...
“தேஜாவு” வெற்றிக் கொண்டாட்டம்

“தேஜாவு” வெற்றிக் கொண்டாட்டம்

சினிமா, திரைத் துளி
வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இப்படம் ஜூலை 22 அன்று வெளியானது. இந்நிலையில் ஊடகங்கள், விமர்சகர்கள், மற்றும் பொது மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற 'தேஜாவு' படத்தின் வெற்றியை இன்று படக்குழுவினர் கொண்டாடினர். இது குறித்து நடிகர் அருள்நிதி கூறுகையில், "இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். ‘தேஜாவு’ படத்தின் தயாரிப்பாளர் விஜய் பாண்டி அவர்கள் இப்படத்தினை நன்றாக விளம்பரப்படுத்திப் பொதுமக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்து இதனை வெற்றிப்படமாக்கியுள்ளார். இத்தருணத்தில் அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச...
தேஜாவு விமர்சனம்

தேஜாவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தேஜாவு என்பது ஒரு ஃப்ரெஞ்ச் சொல். ஒரு நிகழ்வு, ஏற்கெனவே நிகழ்ந்தது போல் தோன்றினாலோ, அல்லது புதிதாய் ஓர் இடத்திற்குச் செல்லும்போது முன்பே அங்கு வந்திருப்பது போல் தோன்றினாலோ, அது தேஜாவு என அழைக்கப்படும். இப்படத்தில், ஒரு வருடத்திற்கு முன் நடந்த ஒரு கடத்தலை, மீண்டும் அதே போல் நிகழும்படி உருவாக்குகின்றனர். யார், ஏன், எதற்கு, எப்படி என்பதுதான் படத்தின் கதை. டிஜிபி மகள் பூஜா கடத்தப்படுகிறாள் என எழுத்தாளர் சுப்பிரமணி எழுதினால், அது அப்படியே நடக்கிறது. இவர் ஏதேனும் எழுதினாலே, அது அடுத்த நிமிடமே நிகழ்கிறது. ஒன்று, சுப்பிரமணி எழுதுவது தற்செயலாக இருக்கலாம்; அல்லது, தீர்க்கதரிசனாமாக (prophecy) இருக்கலாம்; இல்லையெனில், ஏதோ பித்தலாட்டமாக இருக்கலாம். குழம்பிப் போய் நிலை குலையும் டிஜிபி ஆஷோ பிரமோத், மகளைக் கண்டுபிடிக்க, விக்ரம் குமார் எனும் அண்டர்கவர் அதிகாரியை வரவழைக்கிறார். பூஜாவைக் கண்டுபிடிக்க விசாரண...