Shadow

Tag: அருந்ததி

அர்த்தநாரி விமர்சனம்

அர்த்தநாரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இன்ஜினியரான கார்த்திக்கும், காவல்துறை உயரதிகாரியுமான சத்யப்பிரியாவும் காதலிக்கிறார்கள். சத்யப்பிரியா எடுத்து நடத்தும் ஒரு வழக்கும், தன்னை வளர்த்த செல்வமாணிக்கம் ஐயாவின் மரணத்திற்குக் காரணமானவரைத் தேடும் கார்த்தியின் தேடலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. தனித்தனியாக இருவரும் இயங்கினாலும், காதலர்கள் அர்த்தநாரி போல் இணைந்து வேட்டையாடுவதாகப் பதற்றம் கொள்கிறார் வில்லன். இந்தக் கண்ணாமூச்சி வேட்டை எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதை. கல்வியின் அவசியமும், குழந்தைத் தொழிலாளிகளின் அவலமும் படம் நெடுகே சொல்லப்படுகிறது. சொல்பவராக செல்வமாணிக்கம் எனும் பாத்திரத்தில் நாசர் நடித்துள்ளார். அவர் பலமுறை ஏற்று சலித்து விட்ட ஒரு பாத்திரம் என்பதால் படத்தில் அவர் அவ்வளவாக ஈர்க்கவில்லை. அதனாலென்ன, ரசிகர்களை எப்படியும் ஈர்த்து விடுவதென்ன ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை இறக்கியுள்ளன...
ஆண் பாதி பெண் பாதி

ஆண் பாதி பெண் பாதி

சினிமா, திரைத் துளி
கிருத்திகா பிலிம் கிரியேஷன் சார்பில் ஏ.எஸ்.முத்தமிழ் என்பவர் கதை எழுதித் தயாரிக்கும் படம் அர்த்தநாரி. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாரி வேந்தர் பாடல்களை வெளியிட, மைக்ரோசாஃப்ட் நிறுவன முன்னாள் தலைவர் ரங்க பாஷ்யம் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பழம்பெரும் தயாரிப்பாளர் கோவை தம்பி ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள் . படத்தின் டிரைலர் ஒரு அண்டர்கவர் பெண் போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகளைப் பற்றியதாக இருந்தது . நாயகன் ராம்குமார் பேசும்போது, “நடிகனாவேன் என நினைக்கலை. மாடலிங்கில் இருந்தப்ப நான் பண்ண விளம்பரம் ஒன்னு சத்யம் தியேட்டர்ல வந்துச்சு. அதைப் பார்த்துட்டுத்தான் தயாரிப்பாளர் முத்தமிழ் என்னிடம் கேட்டார். ஐ.டி.யில் வேலை செய்துட்டிருந்தேன். வேலையை விட்டுட்டு என்ன பண்ணலாம்.. ஃபோட்டோகிராஃபி அது இதுன்னு குழப்பிட்டு இருந்தேன். அப்பத்தான், ‘உங்க மேல் கான்ஃபிடண்ட் இருக்கு’ன்னு சொல்லி நடி...
நடிகை அருந்ததியின் அர்த்தநாரி

நடிகை அருந்ததியின் அர்த்தநாரி

சினிமா, திரைத் துளி
அருந்ததி அதிரடியாக அசத்தும் புதிய படம் அர்த்தநாரி. இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் சுந்தர இளங்கோவன். இயக்குநர் பாலாவிடம் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றியவர் இவர். அர்த்தநாரி படத்தைப் பற்றி உற்சாகமாகப் பேசும் அருந்ததி, "அர்த்தநாரி படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு முழுமையான ஆக்க்ஷன் படம். அந்த உண்மைச் சம்பவங்கள் எனக்குப் பர்சனலாகவே மிகவும் உத்வேகம் அளித்தன” என்கிறார். அவர் ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘தொட்டால் தொடரும்’ முதலிய படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. “இதில் நான் சவால்கள் நிறைந்த ஒரு அண்டர் கவர் போலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது வழக்கமான அண்டர் கவர் அதிகாரி கேரக்டர் அல்ல. மிகக் கஷ்டமான ஒன்று. இந்தக் கேரக்டருக்காக நான் நிறையவே ஹோம் வொர்க் செய்து என்னை முழுமையாகத் தயார் செய்து கொண்டேன். துப்பாக்கியைப் எப்படி பிடிப்பது? ட்ரிக்கரை எப்ப...
தொட்டால் தொடரும் விமர்சனம்

தொட்டால் தொடரும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகி எதைத் தொட்டதால் என்ன தொடர்கிறது என்பதே படத்தின் கதை. காதல், அதனால் எழும் ஊடல், மெகா சீரியலில் காட்டப்படும் குடும்பப் பிரச்சனை, தமிழ்த் திரைப்படங்களின் ஆதிகாலம் தொட்டே வரும் சித்தி கொடுமை, மொக்கை போட்டே சாகடிக்கும் நாயகனின் நண்பன், கொல்லத் துரத்தும் வில்லன் என அக்மார்க் தமிழ்ப்படத்துக்குரிய சகல விஷயங்களையும் ஒன்று விடாமல் காட்சிப்படுத்தியுள்ளார் கேபிள் சங்கர். இதில் புதுமை எனப் பார்த்தால், வில்லனாக வரும் வின்சென்ட் அசோகன் ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மிரட்டியுள்ளார். படத்தின் தொடக்கத்திலேயே பாத்திரங்களைச் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஹீரோக்கு அநாவசியமான அறிமுகப் பாடல் கிடையாது; நாயகியும் லூசு போலவோ, கவர்ச்சி உடையிலோ அறிமுகமாகவில்லை. நாயகனைக் காதலிக்க மட்டுமே அவர் படத்தில் இல்லை. துக்கம், மகிழ்ச்சி, பொறுப்புணர்ச்சி, குறும்புத்தனம், கோபதாபமுள்ள பெண்ணாக உள்ளார் நாயகி. ஆனால் படத...