கதாநாயகனாகும் ‘அருவி’ மதன்
அரும்புமீசை குறும்புபார்வை, வெண்ணிலாவீடு, விசிறி போன்ற படங்களை இயக்கியவர் வெற்றிவீரன் மகாலிங்கம். ஒரு சிறிய இடைவெளிக்கு அப்புறம் இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஒன்று, முன்னணி நிறுவனம் தயாரிக்க 'விடுதலை' நாயகன் சூரி ஹீரோவாக நடிக்கும் படம். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார் வெற்றிவீரன் மகாலிங்கம்.
"சூரியும் நானும் பால்ய கால நண்பர்கள். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து ரகளையா ஒரு கதை பண்ணினோம். பட்ஜெட் பெரிசு. விரைவில் அந்தப் படம் குறித்த அறிவிப்பு வரும்.
'விடுதலை' படத்தில் ஒப்பந்தம் ஆனதிலிருந்து ஒரு விஷயத்தைச் சொல்லிகிட்டே இருப்பார். ‘காமெடியனா என்னை ஏத்துக்கிட்ட மக்கள், இப்போ கதையின் நாயகனா நடிக்கிறத எப்படி ஏத்துக்கப் போறாங்கன்றத நெனச்சாத் தான் கொஞ்சம் பயமா இருக்கு நண்பா' ன்னு சொல்லிக்கிட்டே இருப்பார். இப்போ, விடுதலை ட்ரெய்லர் வந்த பிறகு கிடைக்க...