
காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review
பணம் உறவுகளைப் பிணைத்து, வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தும் என நம்புபவன் கதிர். சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளைத் தவறவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவன். காதல் திருமணம் புரிந்து கொண்டு, ஊரை விட்டு ஓடி வந்த காந்தி, மனைவிதான் உலகம் என வாழ்பவர். காந்தி தன்னுடைய அறுபதாம் கல்யாணத்தைப் பிரம்மாண்டமாக நடத்தித் தரும்படி எவென்ட் மேனேஜ்மென்ட் செய்யும் கதிரிடம் செல்கிறார். கதிரும் காந்தியும் சந்தித்துக் கொள்வதில் தொடங்கும் படம், கதிரின் வாழ்க்கையில் அச்சந்திப்பு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதோடு முடிகிறது.
காட்சிரூபமாகக் கதைசொல்வதை விட வசனங்களின் மூலமே அனைத்தையும் சொல்லிவிடலாம் என்ற பாணியால், ஒரு ஃபீல்-குட் படத்திற்கான அத்தனை அம்சங்களைக் கொண்டிருந்தும், படம் அதன் இலக்கை அடையத் தடுமாறியுள்ளது. ஒரு நல்ல ஐடியாவை எடுத்துக் கொண்டு, அதில் முழுத் திருப்தியுற்று, சுவாரசியமாகவோ நெகிழ்ச்சியாகவோ திரைக்கதைய...



