ஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்
சீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி
சாருஹாசன், நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா, ஜனகராஜ் நடித்த தாதா 87 வெற்றிப்பட இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்த படமாக நடிகர் அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் 'பீட்ரூ' முடிவடையும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தற்போது, 'பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG)' என்ற நகைச்சுவை த்ரில்லர் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, ஜூலி மற்றும் மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, "எனக்கு பி.ஆர்.ஓ. நிகில் முருகன் அர்ஜூமனை அறிமுகம் செய்தார்.
சீயான் விக்ரமின் தங்கை மகனான அர்ஜூமன் ஓர் ஆர்வமுள்ள நடிகர். சினிமாவில் நடிக்க நடிப்பு, நடனம், சண...