
அர்த்தநாரி – நாயகன் ராம்குமார்
தல அஜித்தின் தீவர ரசிகரான ராம்குமார், "நான் தல அஜித்தின் உண்மையான விசுவாசி; வெறி பிடித்த ரசிகன் என்று சொல்லிக் கொண்டே போகலாம். எந்தவித பின்பலமுமின்றி தமிழ் சினிமாவில் காலூன்றி நின்ற அவரைத்தான் என்னுடைய முன்மாதிரியாக பார்க்கிறேன்!" என்று நெஞ்சம் மகிழ்கிறார்.
ராம்குமார் தனது 'அர்த்தநாரி' திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அடி எடுத்து வைக்கிறார். சராசரி சென்னை இளைஞர்களைப் போல இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் ராம்குமார். எனினும், நடிப்பின் மேல் இவர் கொண்ட காதல், இவரை சில விளம்பரப் படங்களில் நடிக்க வைத்தது. "நான் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும், அந்த வேலையில் நான் முழு மனத்திருப்தி அடையவில்லை. எனக்குள் இருந்த அந்த ஒரே தேடல் நடிப்பை நோக்கிப் பயணித்ததுதான். அப்போது தான் சில விளம்பரப் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். அப்படி நான் நடித்து, திரையரங்கங்களில் திரையிட...