Shadow

Tag: அர்த்தனா பினு

வாஸ்கோடகாமா விமர்சனம்

வாஸ்கோடகாமா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
  வாஸ்கோடகாமா என்பது சிறைச்சாலையின் பெயர். நல்லது செய்பவர்களையோ, கெட்டது நடப்பதைத் தடுப்பவர்களையோ கைது செய்து சிறையில் தள்ளிவிடும் அதிசய யுகத்து சிறைச்சாலை அது. நல்லவர்கள் மிகவும் அருகிவிட்ட கலியுகத்தின் பிந்தைய காலமாம். சிறைக்குள் ஏதேனும் அடிதடியில் ஈடுபட்டு எவரையேனும் காயப்படுத்தினாலோ, கொலை செய்தாலோ விடுதலை செய்து விடுவார்கள். அநியாயங்கள் மிகுந்து கிடக்கும் உலகில், கண் முன் கெட்டதைக் கண்டால் பொங்கியெழும் நாயகன் வாசுதேவன் பல சிக்கல்களை எதிர்கொள்கிறான். நல்லதைத் தட்டிக் கேட்டால் சிறையில் அடைத்துவிடுவார்கள். ஒவ்வொரு முறையும் கைதாகும்போது, அவரது அண்ணன் மகாதேவன் பணம் கொடுத்து மீட்கிறார். அந்த அண்ணனின் சுண்டு விரலில் காயம் ஏற்பட, நரக (Naraka Multispeciality Hospital) மருத்துவமனைக்குச் செல்கிறார். இதயத்தில் பிரச்சனை என ஐ.சி.யூ.வில் சேர்த்து அனுப்பி வைத்துவிடுகின்றனர். அறமற்ற மருத்துவமனைக...
வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்

வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கட்டபொம்மன் போக்குவரத்துக் கழக ஓட்டுநரான பசுபதிக்கு, கபடி விளையாட்டு என்றால் உயிர். தந்தையின் விருப்பத்தைத் தாமதமாக உணரும் விக்ராந்த், தனது சொந்த ஊரான கணக்கன்பட்டிக்குச் சென்று 'வெண்ணிலா கபடி குழு'வில் இணைகிறார். 1989இல் நடக்கும் பீரியட் படம். கதை மட்டும் அக்காலகட்டத்தில் நிகழ்வது போலல்லாமல், படமே 80களின் இறுதியில் எடுக்கப்பட்டது போல் தொடங்குகிறது. இவர் தான் நாயகி, இவர் தான் நாயகன், இவர் நாயகனின் அப்பா, இது நாயகனின் குடும்பம், அவரது பக்கத்து வீட்டுக்காரர், காமெடியன் கஞ்சா கருப்பு என அறிமுகப் படலத்திற்கென தனித் தனி காட்சிகள் வைத்துள்ளனர். கதையோடு ஒட்டாத நகைச்சுவைத் திணிப்புகள் படத்தின் ஆகப் பெரிய மைனஸ். 2009 இல் வந்த முதற்பாகம் போல், காதல் காட்சிகள் அவ்வளவு ரசனையாகவும் க்யூட்டாகவும் இல்லை. அர்த்தனா பினு, விக்ராந்துக்கும் இடையேயான காதல் காட்சிகளில் இன்னும் அழுத்தத்தைக் கூட்டியிருக்கலாம். ப...
செம விமர்சனம்

செம விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகன் பெயர் குழந்தை. குழந்தையாக ஜீ.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார். குழந்தைக்கு 3 மாசத்துக்குள் கல்யாணம் செய்யவேண்டும். இல்லையென்றால் 6 வருடம் கல்யாணம் தள்ளிப் போகும் என்பதால், குழந்தையின் அம்மாவான ஆரவல்லி பெண் பார்க்கும் படலத்தில் தீவிரமாக ஈடுபடுகிறார். சில அவமானங்களுக்குப் பிறகு, மகிழினியை நிச்சயம் செய்கின்றனர். திடீரென, மகிழினியின் தந்தை அட்டாக் பாலா நிச்சயத்தை நிறுத்தி விடுகிறார். அவமானம் தாங்காமல் குழந்தையின் அம்மா ஆரவல்லி கிணற்றில் குதித்து விடுகிறார். அதற்குக் காரணமான அட்டாக் பாலா மீது ஆத்திரம் கொள்ளும் குழந்தை, அவரை எப்படிப் பழி வாங்குகிறார் என்பதே படத்தின் கதை. மிகக் குழந்தைத்தனமான பழி வாங்குதல்தான் படத்தின் பலவீனம். ஒரு சீரியஸ்னஸே இல்லாத நேர்க்கோட்டில் பயணிக்கும் கதை. நகைச்சுவையும் முழுவதுமாக இழையோடாத திரைக்கதை. ஆனால், போரடிக்காமல் பார்த்துக் கொள்கின்றனர் யோகிபாபுவும், கோவை சர...