Shadow

Tag: அறந்தாங்கி நிஷா

“பெரிய நடிகர்கள் உதவி செய்தால் மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்கள்” ; ரூட் நம்பர் 17 விழாவில் ஆரி ஆதங்கம்

“பெரிய நடிகர்கள் உதவி செய்தால் மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்கள்” ; ரூட் நம்பர் 17 விழாவில் ஆரி ஆதங்கம்

சினிமா, திரைச் செய்தி
நேமி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார்.ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, கார்த்திக் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசப்பசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி, கார்த்திக், கவிஞர் செந்தமிழ்தாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.இப்படம் வரும் டிச-29ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை விஜயா போரம் மாலில் ர...
கோலமாவு கோகிலா விமர்சனம்

கோலமாவு கோகிலா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோகிலாவின் அம்மா வடிவுக்கு நுரையீரல் புற்றுநோய் இரண்டாம் நிலையில் உள்ளது. தனது அம்மாவைக் குணபடுத்த 15 லட்சம் செலவாகும் என மருத்துவர் சொல்லிவிட, அப்பணத்திற்காகக் கோகிலா எடுக்கும் முயற்சிகளே படத்தின் கதை. ஒப்புக்குச் சப்பாணியாகக் கூட ஒரு நாயகன் இல்லாத முழு நீள ஹீரோயின் ஓரியன்டட் படம். நயன்தாராவை நம்பி மட்டுமே இத்தகைய முயற்சி சாத்தியம். பாவாடை சட்டையில் அப்பாவியான முகத்துடன் படம் முழுவதும் நயன்தாரா மட்டுமே! இடைவேளைக் காட்சியில் நயன்தாரா காட்டும் மனப்பாங்கு (ஆட்டிட்யூட்) நகைச்சுவையாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், அந்த வன்மம் மிகவும் அச்சுறுத்துகிறது. காதலில் விழுந்த சேகராக யோகி பாபு. எல்.கே எனும் லக்‌ஷ்மண குமாராக அன்புதாசன் நடித்துள்ளார். அவரது அறிமுகமே அட்டகாசம் எனினும் யோகி பாபுவுடனான அவரது காட்சிகளில் பார்வையாளர்கள் வெடித்துச் சிரிக்கிறார்கள். 'சாய்பாபா படத்தை 30 பேருக்கு ஷேர் பண்ணா...