ஜேசன் பார்ன் விமர்சனம்
குண்டடிப்பட்டு தன் நினைவுகளை இழந்து அல்லலுற்ற ஜேசன் பார்ன், மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஒரு கதாபாத்திரம். தன் கடந்த காலத்தை மறந்து தன்னைத் தானே தேடி வந்த ஜேசன் பார்ன், அனைத்து நினைவுகளும் மீண்ட நிலையில், தன் பழைய வாழ்க்கையில் இருந்து துண்டித்துக் கொண்டு தலைமறைவாக வாழ்கிறான். ஜேசனின் கடந்த காலம் பற்றியும், அவனது தந்தையைப் பற்றியும் ஒரு முக்கியமான தகவல், அவனை ஒரு தலையாகக் காதலித்த நிக்கி பார்சன்ஸ்க்குக் கிடைக்கிறது. கண் கொத்திப் பாம்பாகத் தொடரும் சி.ஐ.ஏ.வின் தலையீட்டை மீறி, தன் உயிர் போகும் முன் ஜேசனிடம் அந்தத் தகவலைக் கொடுத்து விடுகிறாள். தன் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு மர்மத்தை, மீண்டும் தேடிச் செல்கிறான் ஜேசன் பார்ன்.
தொடக்கம் முதலே படம் பயங்கர விறுவிறுப்பாகப் போகிறது. பேரி அக்ராய்டின் ஒளிப்பதிவை தனது கச்சிதமான படத்தொகுப்பின் மூலமாக க்றிஸ்டோஃபர் ரெளஸ், ஹாலிவுட்டின் வழக்கமானதொரு நாயகன் அறிமு...