Shadow

Tag: அல்லு அர்ஜுன்

இந்து பழங்குடியின தெய்வங்களைக் கௌரவிக்கும் ஜாதரா திருவிழாவை காட்சிபடுத்திய புஷ்பா 2 தி ரூல் டீசர்

இந்து பழங்குடியின தெய்வங்களைக் கௌரவிக்கும் ஜாதரா திருவிழாவை காட்சிபடுத்திய புஷ்பா 2 தி ரூல் டீசர்

சினிமா, திரைத் துளி
ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் டீசரை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் வெளியான உடனேயே இணையத்தை ஆக்கிரமித்ததோடு, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் டீசரைச் சிலாகித்து அல்லு அர்ஜூனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். பிரம்மாண்டம், வண்ணங்கள் மற்றும் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள காட்சிகள் அனைத்தும் டீசரில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருக் காட்சியிலும் புஷ்பா ராஜ் நம்பமுடியாத, அதே சமயம் சக்தி வாய்ந்த அவதாரத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் தீவிரத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார். இதற்கு இன்னும் வலுசேர்க்கும் விதமாக தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை நம் இதயத்துடிப்பை இன்னும் அதிகப்படுத்துகிறது. படத்தின் டீசரில் ஜாதரா காட்சி இடம்பெற்றுள்ளது. சம்மக்க...
புஷ்பா: தி ரைஸ் விமர்சனம்

புஷ்பா: தி ரைஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஓரு தெலுங்கு சினிமாவை விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்வதா என்ற தயக்கம் என்னிடம் எப்போதுமே உண்டு. பார்வையாளர்களின் சிந்தனையை முடக்கிப் போடும் தெலுங்குத் திரையுலகின் ஹைப்பர் சினிமாத்தனமும், லாஜிக்கல் அத்து மீறல்களும் உலகமே அறிந்த ஒன்று. இதற்கு புஷ்பா மட்டும் விதி விலக்கா என்ன? இல்லை. இது அச்சு அசல் ஒரு தெலுங்கு சினிமாதான். அதே லட்சணங்களோடுதான் இந்தப் படமும் இருக்கிறது. ஆனாலும் என்னைக் கவர்ந்த சில அம்சங்கள் இதில் இடம் பெற்று இருப்பதை நான் குறிப்பிட்டு ஆக வேண்டும். அவை, பாத்திர வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, வட்டார மொழிப் பயன்பாடு, உடல்மொழி, இலக்கு மாறாமை ஆகியனவாகும். சமீபத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ என்ற படத்தின் வெற்றி குறித்து விதந்தோதிக் கொண்டிருந்தோம். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ‘சீரியசான’ முக பாவத்தோடு நடித்து இருந்ததற்கு வெகுவான பாராட்டினைப் பெற்றிருந்தார். சீரியசான ...
புஷ்பா: தி ரைஸ் – அதிவிரைவு ரோலர் கோஸ்டர்

புஷ்பா: தி ரைஸ் – அதிவிரைவு ரோலர் கோஸ்டர்

சினிமா, திரைச் செய்தி
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா – தி ரைஸ்’ திரைப்படம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜனவரி 7 ஆம் தேதி அன்று அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியாவின் கூட்டுத் தயாரிப்பில் உருவான மெய்சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகள் நிறைந்த இத்திரைப்படத்தில், கதை நாயகனாக அல்லு அர்ஜூன் தோன்ற, அவரோடு ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள். ஃபஹத் ஃபாசில், தெலுங்கில் அறிமுகமாகும் முதற்படமிது என்பது குறிப்பிட்த்தக்கது. புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1, ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள சேஷாசலம் காட்டுப் பகுதிகளுக்குள் மெய்சிலிர்க்க வைக்கும் தீவிரமான பயணத்திற்குப் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. புஷ்பராஜ் என்ற லாரி ஓட்டுநர் பாத்திரத்தில் தோன்றும் அல்லு அர்ஜூன், செம்மரக்கட்டை கடத்தல் தொழிலில் தீவிரமாக ஈடு...
என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவின் மீது தீவிர காதல் கொண்ட பெருங்கோபக்காரனான சூர்யா இராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறான். அவன் விருப்பப்பட்ட எல்லைக் காவல் வேலை, சூர்யாவிற்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. 'கோபம் வந்துச்சு. அடிச்சேன்' என்ற சூர்யாவின் அறிமுக அத்தியாயமே தூள். 'இவன் தான் சூர்யா' எனப் பார்வையாளர்களை முழுப் படத்திற்கும் தயாராக்கிவிடுகிறார் இயக்குநர் வம்சி. முறுக்கேறிய உடலுடம் ஸ்டைலிஷ் ஆக்டர் அல்லு அர்ஜுன், சூர்யா பாத்திரத்திற்குக் கனகச்சிதமாய்ப் பொருந்துகிறார். கோச்சா, ரவி வர்மா, பீட்டர் ஹெய்ன், ராம் லக்‌ஷ்மன் என நான்கு ஸ்டன்ட் மாஸ்டர்களும் சூர்யா பாத்திரத்திற்கு உரம் சேர்த்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். அதகளமான சண்டையில் தொடங்கும் படம், அதே போலொரு சண்டையினோடு இடைவேளையில் முடிகிறது. அதன் பின், அதிரடியான சண்டை ப்ரீ-க்ளைமேக்ஸில் தான் வருகிறது. ஆம், படத்தின் க்ளைமேக்ஸில் சண்டை இல்லை. ...
அல்லு அர்ஜுனின் – என் பெயர் சூர்யா

அல்லு அர்ஜுனின் – என் பெயர் சூர்யா

சினிமா, திரைச் செய்தி
ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் நாகபாபு தயாரித்துள்ள படம் 'என் பெயர் சூர்யா - என் வீடு இந்தியா'. அல்லு அர்ஜுன், அனு இம்மானுவேல், அர்ஜுன், சரத்குமார், நதியா, பொமன் இரானி நடித்திருக்கின்றனர். "அல்லு அர்ஜுன் கேரியரில் இது ஒரு சிறந்த படம். இந்தப் படத்தைப் பார்த்தவுடன் என் பெயர் ஸ்ரீதர், என் வீடு இந்தியா என்று தான் சொல்லத் தோன்றியது. பாகுபலி, பாகமதி உட்பட தெலுங்குப் படங்களைத் தமிழ்நாட்டில் முழுமனதோடு வரவேற்ற அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. இந்தப் படத்துக்கும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார் தயாரிப்பாளர் ஸ்ரீதர் லகடபாடி. "பாகுபலிக்குப் பிறகு இந்திய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும் இந்தப் படத்தில் நான் வேலை செய்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தியாவுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கதாபாத்திரம் தான் நாயகன் அல்லு அர்ஜுன் கதாபாத்திரம். தளபதி ரஜினி சார், நடிகர...