Shadow

Tag: அழியாத கோலங்கள் 2 திரைப்படம்

அழியாத கோலங்கள் 2 விமர்சனம்

அழியாத கோலங்கள் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழில், இயக்குநர் பாலு மகேந்திராவின் முதல் படம் 'அழியாத கோலங்கள்'. 1979 இல் வெளியான இப்படம், தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதிதான ஒரு சோதனை முயற்சி. எப்படி குழந்தைப் பருவ நட்பு, அழியாத கோலங்களாய் கெளரிசங்கர் மனதில் பதிந்திருந்தது என்பதே அப்படத்தின் கதை. நாற்பது வருடங்களுக்குப் பின் வெளியாகியிருக்கும், 'அழியாத கோலங்கள் 2' படத்திற்கும், பாலு மகேந்திராவின் முதல் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தலைப்பைத் தவிர்த்து. இன்னொரு ஒற்றுமை, பிரதான கதாபாத்திரத்தின் பெயர் கெளரிசங்கர் என்பதாகும். 'மோகனப் புன்னகை' எனும் புத்தகத்திற்கு சாகித்திய அகாதெமி விருது பெறுகிறார் கெளரிசங்கர். டெல்லியில் சாகித்திய அகாதெமி விருது பெற்றதும், தான் எழுதுவதற்குக் காரணமாக இருந்த மோகனா எனும் தனது கல்லூரிக் காலத்துத் தோழியை, 24 வருடங்களுக்குப் பின் காண சென்னைக்கு வருகிறார். கிண்டியில் தனியாக வசிக்கும் 44 வயதான மோகனாவி...
விருதுக்குத் தயாராய் அழியாத கோலங்கள்- 2

விருதுக்குத் தயாராய் அழியாத கோலங்கள்- 2

சினிமா, திரைத் துளி
நட்பையும் காதலையும் இதை விட புனிதப்படுத்தி விட முடியாது என்கிற மாதிரியான ஒரு அழுத்தத்தை மனசுக்குள் ஏற்படுத்தும் அழியாத கோலங்கள் - 2 திரைப்படம் படத்தில், ஓர் எழுத்தாளராக வாழ்ந்துள்ளார் பிரகாஷ்ராஜ்; போலீஸ் வேடத்தில் காக்கி சட்டையின் கடுமையையும், உள்ளத்தின் ஈரத்தையும் பிரதிபலித்துள்ளார் நாசர்; பெண்ணின் பெருமையையும் பொறுமையையும் இவரை விட யாரால் பிரதிபலிக்க முடியும் என்கிற மாதிரியான காதாபாத்திரத்தில் ரேவதி அழகாக நடித்துள்ளார். இப்படி நான்கு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து அழுத்தமான திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் M.R.பாரதி. “அடிதடி இல்லை. குத்துப்பாட்டு இல்லை. காமெடி இல்லை. டூயட் இல்லை. இதெல்லாம் தான் கமர்ஷியல் ஃபார்முலா என்றால், இது எதுவும் இல்லாமல் இரண்டு மணி நேரம் திரையை நோக்கியே நம் கண்கள் இருக்கும் என்றால் அது அதிசயம் தானே! அந்த அதிசயத்தை அழியாத கோலங்கள் 2 நிகழ்த்தி இருக்கிறது. கொ...