
அவள் பெயர் ரஜ்னி – காளிதாஸ் ஜெயராமின் த்ரில்லர் படம்
நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவினில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
நடிகர் அஸ்வின் குமார், "விடாமுயற்சிக்கு ஒரு உதாரணம் இந்தத் திரைப்படம். அவ்வளவு உழைத்துள்ளோம். பைலிங்குவலாக இரண்டு மொழிகளில் பெரிய உழைப்பில், இப்படத்தை உருவாக்கியுள்ளோம்" என்றார்.
நடிகர் ரமேஷ் கண்ணா S, "சின்ன படங்கள் தயாரிப்பது வெளியிடுவது இந்தக் காலத்தில் கடினமாக இருக்கிறது. சின்ன படங்களுக்கு ஆதரவு தர வேண்டியது நம் கடமை. லோகேஷ் பெரிய படம் தருகிறார் அதில் 1000 பேர் பிழைக்கிறார்கள், அதே போல் சின்ன படங்களில் 200 பேர் வரை பிழைக்கிறார்கள். சின்ன படங்களுக்கு நல்ல ஆதரவைத் தர வேண்டும். லோகேஷ் போன்ற இயக்குநர் இம்மாதிரி படங்களுக்கு வந்து ஆதரவு தருவது மகி...