
சார்லி சாப்ளின் 2 விமர்சனம்
ஓர் இக்கட்டில் மாட்டிக் கொண்டு, அதிலிருந்து தப்பிக்க ஹாலிவுட் சார்லி சாப்ளின் மிகச் சீரியசாக முயலும் அனைத்தும் பார்வையாளர்களுக்கு நகைச்சுவை விருந்தாக அமையும். அதன் அடிப்படையில், 2002இல் வெளிவந்த வெற்றிப்படமான சார்லி சாப்ளினின் மைய இழை அமைந்திருக்கும். 17 வருடங்களுக்குப் பின், சார்லி சாப்ளின் 2 வருகிறது. ஆனால், இது முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லை. ஓர் இக்கட்டில் சிக்கி, அதிலிருந்து மீளப் பார்ப்பதுதான் இப்படத்தின் கருவும்.
முதல் பாகத்தில் அமர்க்களம் புரிந்த பிரபு, பிரபுதேவா, இயக்குநர் ஷக்தி சிதம்பரம் மட்டுமே இரண்டு படத்திற்குமான இணைக்கும் கண்ணி. முதற்பாகத்தைப் போலவே பிரபு பாத்திரத்தின் பெயர் ராமகிருஷ்ணன், பிரபுதேவா பாத்திரத்தின் பெயர் பிரபு. இப்படத்தில் என்ன மாறுதலென்றால், 2002இல் இரண்டு நாயகர்களில் ஒருவரான பிரபு இப்படத்தில் கதாநாயகியின் தந்தையாக ப்ரோமோட் ஆகியுள்ளார். பிரபுதேவா இன்னும் அதே ...