
“துருவின் அப்பா சியான் விக்ரம்” – மகிழ்ச்சியில் மிதக்கும் தந்தை
அறிமுக கதாநாயகனான துருவ் விக்ரம், "ஆதித்யா வர்மா படத்திற்கான ரெஸ்பான்ஸைப் பத்திக் கேள்விப்படும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்காகத் தான் இரண்டு வருடம் காத்திருந்தோம் என்பதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. இசையமைப்பாளர் ரதன் உழைப்பு மிகப் பெரியது. கிரிசாயா சார் வெரி ஹார்ட் ஒர்க்கர்.
தனுஷ் (படத்தில் நண்பனாக நடித்தவர்) முன்னாடி எப்படி நடிக்கிறது என்ற பயம் எனக்கு இருந்தது. ஏன் என்றால் அவன் பாலிலிவுட்ல கேமரா வொர்க் பண்ணவன். சவுரியா (படத்தின் இணை இயக்குநர்) நல்ல உழைப்பாளி. என் அப்பா என் ஜிம் ட்ரைனரிடம் கூடப் படத்தைக் காட்டுவார். ஆனால் என்னிடம் காட்ட மாட்டார். எல்லாவற்றையும் எனக்கு சர்ப்ரைஸாகச் செய்வார்.
அன்புதாசன் படத்தோட ஸ்ட்ராங் கேரக்டர். அவன் ரொம்ப நல்லா நடிச்சிருக்கான். அப்பாவும் இந்தப் படத்தில் டயலாக் எழுதி இருக்கிறார். உதவி இயக்குநர்கள் கொடுக்குற எஃபெர்ட் தான் படமே. அவர்கள...