
ஆந்திரா மெஸ் விமர்சனம்
யானையிடம் இருந்து நான்கு எறும்புகள் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு வயதான ஜமீன்தாரிடம் அடைக்கலம் கோருகின்றன. யானை எறும்புகளைத் தேடி வருகின்றது. அந்தப் பணத்தால் யானை வாழ்ந்ததா அல்லது நான்கு எறும்புகள் வாழ்ந்தனவா என்பதே படத்தின் கதை.
கதாப்பாத்திரங்களைக் காமிக்கலாக அறிமுகம் செய்கின்றனர். ஆனால், அந்த ஃப்ளோ படம் முழுவதும் தொடர்வதில்லை. இடையில் இயக்குநர், "நதி ஒரே திசையில் தான் நகரமுடியும். நதியில் இருக்கிற படகு இரண்டு திசையில் நகரும். நதியில் இருக்கிற மீன் நாலு திசையில் நகர முடியும். அதைக் கொத்திட்டுப் போற பறவை அஞ்சு திசையில நகரலாம். ஆனா கரையோரம் உட்கார்ந்து இதையெல்லாம் பார்த்துட்டிருக்கிற ஒருத்தனோட மனசு, எல்லாத் திசையிலும் நகரும்" என்று சீரியசான குரலில் வாய்ஸ்-ஓவர் தருகிறார். நதி, படகு, மீன், வேடிக்கை பார்ப்பவனின் மனது போன்றவை எதைக் குறிக்கிறது என்ற தெளிவில்லை.
மனதில் எதையும் பதிய விடாமல் கலைத்த...