Shadow

Tag: ஆன்லைன் வகுப்புகள்

கல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி

கல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி

சமூகம்
கொரோனா தொற்றுக் காரணமாக அரசு ஊரடங்கை அறிவித்த பின் அடித்தட்டு மக்கள் தான் வழக்கம் போல் இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள். இருக்க இடம், பார்க்க வேலை, உண்ண உணவு என எதுவுமற்ற நிலையில் இருக்கும் மக்களுக்கு அரசின் கல்வித்துறை தற்போது ஆன்லைன் கல்வி மூலமாக ஏழைகளின் கல்விக்கே வேட்டு வைத்துள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் தொடர்விடுமுறை காரணமாகப் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு ஆன்லைன் வழியில் கற்றுத்தர அறிவுறுத்தி இருக்கிறது. ஆனாலும் ஸ்மார்ட் ஃபோனோ, லேப்டாப் வசதியோ இல்லாத வீட்டுப்பிள்ளைகள் எப்படி கல்வி பயில இயலும்? மேலும் ஒருநாளைக்குப் பாடத்தை ஆன்லைனில் முழுதும் கவனிக்க வேண்டும் என்றால் டெய்லி டேட்டா 3 GB வரை தேவைப்படும் என்கிறார்கள். இல்லாத எளியவர்கள் எப்படி ரீசார்ஜ் செய்ய பெருந்தொகை செலவு செய்யமுடியும். மேலும் சில தன்னார்வலர்கள், சிலருக்குக் கற்றலுக்காக ஃபோன், லேப்டாப் போன்றவற்றை வழங்குகிறா...