Shadow

Tag: ஆமீர் கான்

பார்த்திபனின் ஒத்த செருப்புக்குக் குவியும் நட்சத்திரப் பாராட்டுகள்

பார்த்திபனின் ஒத்த செருப்புக்குக் குவியும் நட்சத்திரப் பாராட்டுகள்

சினிமா, திரைத் துளி
உலகத் திரைப்பட சாதனை முயற்சியாக ராதாகிருஷ்ணன் பார்த்திபனால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒத்த செருப்பு படத்துக்கு சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு குவிந்து வருகிறது. ரசிகர்களுக்கு நெருக்கமான ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மட்டுமின்றி ஆமீர்கான், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால் மற்றும் கே.ஜி.எஃப். யாஷ் ஆகியோரும், இப்படத்தைத் தயாரித்து இயக்கியதுடன், தனியொரு மனிதனாகத் தோன்றி, முழுப் படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கும் பார்த்திபனின் வானளாவிய சாதனையை வாயார வாழ்த்திப் புகழ்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘பார்த்திபனின் அபாரமான இந்த முயற்சி, உலக அளவில் அங்கீகாரம் பெற வேண்டும். எனவே சப்-டைட்டிலுடன் படத்தை ஆஸ்கார் விருது தேர்வுக்கு அனுப்ப வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். உலக நாயகன் கமல்ஹாசன் தன் வாழ்த்துச் செய்தியில், ‘ஏற்கெனவே ஒற்றைப் பாத்திரமாகப்...