Shadow

Tag: ஆரா சினிமாஸ் மகேஷ்

சிபிராஜின் ரேஞ்சர் – ஆவ்னி புலியின் உண்மைக் கதை

சிபிராஜின் ரேஞ்சர் – ஆவ்னி புலியின் உண்மைக் கதை

சினிமா, திரைத் துளி
‘ஆவ்னி’ எனும் புலி பல மனிதர்களை உயிருடன் அடித்துச் சாப்பிட்ட சம்பவம் நாடு முழுதும் சர்ச்சையைக் கிளப்பியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவாத்மல் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் தான் ரேஞ்சர். பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி போன்ற கவனித்தக்க படங்களை உருவாக்கிய இயக்குநர் தரணிதரன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன், மது ஷாலினி ஆகிய இருவரும் முக்கிய பாத்திரங்கள் ஏற்க, ஆரா சினிமாஸ் ஜி.மகேஷ் தயாரிப்பில் ரேஞ்சர் படம் விமரிசையாகத் தொடங்கப்பட்டுள்ளது. ஆரா சினிமாஸ் மகேஷ், “ரேஞ்சர் படத்தின் திரைக்கதை வியக்கத்தக்க வகையிலானது. இதுவரை நாம் மனிதர்களைத் தாக்கும் விலங்குகளை மையமாகக் கொண்ட படங்கள் நிறைய பார்த்திருப்போம். அவையாவும் கற்பனைக்களத்தினைக் கொண்டது. ஆனால் ரேஞ்சர் அப்படியானது அல்ல. நம் நாட்டில் நடைபெற்ற நம்பமு...
100 விமர்சனம்

100 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது புஜ பல பராக்கிரமத்தால், தீயவர்களையோ, சமூக விரோதிகளையோ அடித்து உதைத்து அவர்களைச் சிறையில் அடைத்து, நேர்மையான காவல்துறை அதிகாரியாக மிளிர வேண்டுமென்பது அதர்வாவின் லட்சியம். ஆனால், அவசர உதவி கோரி எண் 100-இற்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்கும் கண்காணிப்பு அறையில் அவரைப் பணிக்கு அமர்த்திவிடுகின்றனர். நேடியாகக் கதைக்குள் செல்லாமல், படத்தின் முதற்பாதி தேவையில்லாத காட்சிகளால் அலைக்கழிக்கிறது. அதர்வாவின் தந்தையாக பருத்தி வீரன் சரவணன், அம்மாவாக நிரோஷா, காதலியாக ஹன்சிகா, நண்பராக 'எருமை சாணி' விஜய் ஆகியோர் கதைக்கு எவ்விதத்திலும் உதவவில்லை. தயாரிப்பாளரான ஆரா சினிமாஸ் மகேஷ், அன்வர் எனும் பாத்திரத்தில் அதர்வாவின் நண்பராக நடித்துள்ளனர். ஓர் அழகான பாத்திரத்திற்கு, கொஞ்சம் லெத்தார்ஜிக்கான உடற்மொழியாலும் நடிப்பாலும், போதுமான நியாயத்தைச் செய்யத் தவறிவிடுகிறார். மறைந்த நடிகர் சீனு மோகனின் கதாபாத்திர வா...