Shadow

Tag: ஆரா

பைசா விமர்சனம்

பைசா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குப்பை பொறுக்கும் தொழிலாளியான முருகனுக்கு அடையாறு நதிக் கரையோரமாக 100 கோடி ரூபாய் கிடைக்கின்றது. அந்தப் பணம் அவனைப் படுத்தும் பாடு அல்லது அவனுக்குள் நேரும் அகப்போராட்டம் தான் படத்தின் கதை. முதல்முறையாகத் தனி நாயகனாக நடித்துள்ளார் ஸ்ரீராம். ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூடச் சம்பாதிக்க முடியாமல் போகிறதென வருந்தும் முருகனுக்கு, சாலையில் கிடைக்கும் 3000 ரூபாய் பெரிதாகப் படவில்லை. ஆனால், 100 கோடியைப் பார்த்ததும் அவன் மனம் சபலமுறுகிறது. தனது பேன்ட்டின் கிழிசலை 1000 ரூபாய் தாள் கொண்டு அடைக்குமளவு போதை தலைக்கேறுகிறது. முருகனாக ஸ்ரீராம் நன்றாக நடித்துள்ளார். ஆனால், காதலோடு சிரிக்கும் பொழுதுதான் கொஞ்சம் பொழுதுதான் லேசாகத் தடுமாறுகிறார். டிப்பார்ட்மென்டல் ஸ்டோரில் பணி புரியும் வேணியாக அறிமுகமாகியுள்ளார் ஆரா. அவருக்கு எல்லாவிதமான ஆடையும் பொருந்துகிறது. முருகன், வேணிக்குள்ளான காதல் அத்தியாயம் மிக யதார்...
பைசா முக்கியம் – நடிகை ஆரா

பைசா முக்கியம் – நடிகை ஆரா

சினிமா, திரைத் துளி
பணத்தை கதைக் கருவாகக் கொண்டு உருவாகியுள்ள படம் பைசா. விஜயின் 'தமிழன்' திரைப்படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இத்திரைப்படத்தை இயக்க, பசங்க புகழ் ஸ்ரீராம், புதுமுகம் ஆரா ஆகியோர் முன்னணி கதாபாதிரங்களில் நடித்துள்ளனர். கான்பிடண்ட் பிலிம் கபே, KJR ஸ்டுடியோஸ் மற்றும் RK ட்ரீம் வேர்ல்ட் இந்தப் படத்தைத் தயாரிக்க கராத்தே கே.ஆனந்த் இணை தயாரிப்பு செய்துள்ளார். நடிகர்கள் நாசர், மதுசூதனன், மயில்சாமி, ராஜசிம்மன், செண்ட்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. K.P. வேல்முருகனின் ஒளிப்பதிவும், J.V. இசையும் படத்திற்கு வலுவூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவில் பைசாவை மையமாக வைத்துக் கொண்டு உருவான பாடல்கள் ஏராளம். பிரபு தேவாவின், 'சென்னை பட்டினம் எல்லாம் கட்டணம்’, சிலம்பரசனின், ‘நோ மணி நோ ஹனி’, கருணாகரனின்,‘காசு பணம் துட்டு மணி’ என ஏகப்பட்ட பாடல்கள் மக்கள் மத்தியில் பிரப...