Shadow

Tag: ஆர்.டி.ராஜா

ரெமோ – திருட்டைத் தடுக்க புது யுக்தி

ரெமோ – திருட்டைத் தடுக்க புது யுக்தி

சினிமா, திரைத் துளி
ரெமோ மிகப் பெரும் வெற்றியைப் பெரும் என மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது படக்குழு. பொதுவாகவே ஒரு திரைப்படமானது அதன் வெளியீட்டு தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே வெளி நாடுகளில் வெளியிடப்படும். ஆனால் தற்போது ரெமோ படத்தின் பாதுகாப்பு கருதி அதை சற்றே மாற்றி இருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. "ஒரு நாள் முன்னதாக நாம் வெளிநாடுகளில் திரைப்படத்தை வெளியிடுவதால், வெகு சுலபமாக அந்தப் படமானது வெளியே கசிந்து விடுகிறது. ஆனால் ஒரே நாளில், ஒரே சமயத்தில் இந்தியா உட்பட மற்ற வெளி நாடுகளிலும் திரைப்படத்தை வெளியிட்டால், அப்படி நடக்க வாய்ப்புகள் குறைவு. இது நம்முடைய வாழ்க்கை!! எந்தவித அச்சமும் இன்றி இதைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து வழி வகைகளையும் நாம் உருவாக்க வேண்டும்” என்று கூறுகிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. திரைப்படத் தயாரிப்புத் துறையில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் மூலம், ஒரு படத்தை எப்படி விளம்பரப்படுத்த வ...