Shadow

Tag: இகோர்

வந்தா மல விமர்சனம்

வந்தா மல விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாரோ ஒருவரைக் கண்டுபிடித்துக் காப்பாற்றினால், இரண்டு கோடி ரூபாய் கிடைக்குமென செயின் திருட்டில் ஈடுபடும் நான்கு நண்பர்களுக்குத் தெரிய வருகிறது. அந்த முயற்சியில், செயின் திருடர்களுக்குக் கிடைத்தது மலையா முடியா என்பதுதான் படத்தின் கதை. ஒரு காவல்துறை அதிகாரிக்கு எந்தெந்த விஷயத்திற்காகவெல்லாம் மனநலம் பாதிக்கப்படும்? இந்தப் படத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி உண்டு. ‘புகை பிடிக்க அரசு தடை விதித்ததால், புகை பிடிக்காமல் மனநலம் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி’ இளங்கோவாக வருகிறார் மகாநதி ஷங்கர். இது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் படம் நெடுகும் ஈர்க்கிறது. மனநலம் பாதிக்கப்பட்ட அதிகாரியுடன் இருந்தும், நண்பர்களுக்காகப் பரிந்து பேசியும் அவஸ்தைப்படும் கான்ஸ்டபிள் பெருமாளாக கவனிக்க வைக்கிறார் செளகத். ‘கலாபக் காதலன்’ இயக்கிய இயக்குநர் இகோரின் கதாப்பாத்திரத் தேர்வுகள் அனைத்துமே கச்சிதமாக ...