Shadow

Tag: இசையமைப்பாளர் அம்ரீஷ்

தில் ராஜா – எந்தப் பிரச்சனை என்றாலும் எதிர்கொள்பவன்

தில் ராஜா – எந்தப் பிரச்சனை என்றாலும் எதிர்கொள்பவன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம் “தில் ராஜா” ஆகும். வருகிற 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய அம்ரீஷ், "தில் ராஜா படத்தில் நான் நடித்த பாடல் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள், ஆனால் இனி நடிப்பேனா எனத் தெரியவில்லை. படம் முடித்த பின்னர் ப்ரோமோஷனுக்கு மாஸாகப் பாடல் கேட்டார்கள். ஹ்யூமரா காமெடியாக இருக்க ஆள் வேண்டும் என்று சொன்னார்கள். ஆள் தேடித் தேடி கடைசியில் என்னையே நடிக்க வைத்து விட்டார்கள். ஏ. வெங்கடேஷ் சார் படத்தில் இசையமைக்க எவ்வளவோ ஆசைப்பட்டிருக்கிறேன். விஜய் சார் ஃபேன் நான், அவரையும் அம்மாவையும் வைத்து படம் எடுத்திருக்கிறார். அவருடன் படம் கிடைத்தது மகிழ்ச்சி. விஜய்...
நடிகை ஜெயசித்ராவின் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடிய மகன் அம்ரீஷ்

நடிகை ஜெயசித்ராவின் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடிய மகன் அம்ரீஷ்

சினிமா
கலைமாமணி டாக்டர் ஜெயசித்ராவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய அவரது மகனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஷ். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா, திரையுலக வாழ்வை தனது 6 வயதில் தொடங்கினார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், ‘குறத்தி மகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கமல் ஹாசன், பிரபு, முத்துராமன், ஜெய்ஷங்கர், விஜய், அஜித் என்ற இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள முன்னணி நாயகர்களுடனும், இளம் கதாநாயகர்களுடனும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘100% காதல்’ ஜி.வி.பிரகாஷ் உடனும் நடித்திருக்கிறார். மேலும், 'நானே என்னுள் இல்லை' படத்தில் தன் மகன் இசையமைப்பாளர் அம்ரிஷ் உடனும் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொ...