ஆதித்ய வர்மா: விக்ரம் துருவுக்காற்றும் நன்றி
துருவ் விக்ரம் நடித்த 'ஆதித்ய வர்மா' திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. தமிழ்த் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகராக கால் பதிக்கிறார். கிரிசாயா இயக்கிய இந்தப படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் கிரிசாயா பேசுகையில்," நான் பல இயக்குனர்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளேன். ஆனால் எனக்கு முதல் அங்கீகாரம் தமிழ்த் திரைத் துறையில் தான் கிடைத்துள்ளது. தமிழ் மொழிக்கும், தமிழ்த் திரையுலகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். யார் பெஸ்ட் எனக் கேட்கிறார்கள். விஜய் தேவர...