Shadow

Tag: இந்திய அணி

மழையில் கரைந்த கனவு

மழையில் கரைந்த கனவு

சமூகம்
லீக் சுற்றில் முதலிடம் பிடித்த இந்தியாவும், நியூசிலாந்தும் முதலாவது அரையிறுதியில் மோதின. டாஸ் வென்ற வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் குல்தீப்புக்குப் பதில் சஹோல் சேர்க்கபட்டார். இலங்கைக்கு எதிரான முதல் போட்டியைத் தவிர, மற்ற ஆட்டங்களில் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்தப் போட்டியிலும் அது தொடர்ந்தது. ஆட்டத்தின் முதல் பந்தை புவனேஷ்வர் வீச, குப்தில் எதிர்கொண்டார். பந்து பேடில் பட, LBW கேட்டனர். களநடுவர் மறுக்க, இந்தியா DRS கேட்டது, ரீப்ளேவில் பந்து ஸ்டெம்பை மிஸ் செய்வது தெரிய, இந்தியா தனது ரீவீயூ வாய்ப்பை இழந்தது. புவனேஷ்வர், பும்ரா இருவரும் தத்தம் முதல் ஓவரை மெய்டினாக வீச, ஆட்டத்தின் 17வது பந்தில் நியூசிலாந்து முதல் ரன்னை எடுத்தது, குப்தில் ஏன் அந்த ரன்னை எடுத்தோம் என அடுத்த ஓவரில் நினைத்திருப்பார். பும்ரா வீசிய பந்தில் கோலி...
முதலிடத்தில் இந்தியா

முதலிடத்தில் இந்தியா

சமூகம்
 அரையிறுதிக்கான அணிகள் முடிவாகிவிட்டாலும், முதல் இரண்டு இடங்களைத் தீர்மானிக்கும் போட்டியாக இந்தியா -இலங்கை , ஆஸ்திரேலியா தென் ஆஃப்ரிக்கா போட்டிகள் அமைந்தது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணரத்னே பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்தியா அணியில் ஷமி, சஹோலுக்கு பதில் ஜடேஜா, குல்தீப் சேர்க்கபட்டனர்.கருணரத்னே, குஷால் பெரேரா களமிறங்க புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை வீசினார். இலங்கைக்கான முதல் பவுண்டரியை குஷால் அந்த ஓவரில் அடித்தார். அடுத்த ஓவரை பும்ரா மெய்டினாக வீச, அடுத்து புவனேஷ்வர் குமார் ஓவரில் 12 ரன் அடித்து ரன்ரேட் உயர்த்திக் கொண்டணர். நான்காவது ஓவரில் பும்ரா கருணரத்னேவை வீழ்த்தினார். 10 ரன்னில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேற, ஓரு நாள் சர்வதேச போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய சாதனையை பும்ரா புரிந்தார். குறைந்த போட்டியில் 100 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது இந்தியா வீரர் என...
உலகக்கோப்பை அரையிறுதிக்குள் இந்தியா

உலகக்கோப்பை அரையிறுதிக்குள் இந்தியா

சமூகம்
இந்தியா - வங்கதேசம் மோதும் போட்டிகள் என்றாலே இணைய ரசிகர்களுக்கு கொண்டாட்டாம் தான். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள் மோதல் இல்லாத குறையை இந்தியா - வங்கதேசம் தான் தீர்த்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமில்லாமல் வீரர்களும் அவ்வப்போது இந்த ஆட்டத்தில் கலந்து கொள்வர்கள். 2016 டி20யில் இந்தியா அரையிறுதியில் தோற்றவுடன், இன்று நிம்மதியாகத் தூங்குவேன் என் முஸ்தபிஷர் ரஹிம் ட்வீட் போட்டது, ரன் ஓடும்போது குறுக்க வந்த முஸ்தபிஷர் ரஹ்மானை தோனி இடித்து தள்ளியது என பல ரகளையான சம்பங்கள் கடந்த சில வருடங்களாக நடக்கிறது. இந்தியாவிற்கு எதிராக 2007 உலகக்கோப்பையில் பெற்ற வெற்றிக்குப் பின் எந்த ஐ.சி.சி. போட்டிகளிலும் வங்கதேசம் இந்தியாவை வென்றதில்லை.  கடந்த சில போட்டிகளில் ரசிகர்களின் கடும் விமர்சனத்தைச் சந்தித்த இந்திய அணியில் இரண்டு மாற்றாம் செய்யப்பட்டது. ஜாதவிற்கு பதில் தினேஷ் கார்த்திக...
இந்தியா – இங்கிலாந்து போட்டி: ஒரு போஸ்ட் மார்ட்டம்

இந்தியா – இங்கிலாந்து போட்டி: ஒரு போஸ்ட் மார்ட்டம்

சமூகம்
உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியாவின் முதல் தோல்வி இது. நிச்சயமாக தனி ஒருவர் இந்தத் தோல்விக்கு காரணமில்லை. ஓர் அணியாகத் தோற்றிருக்கிறோம். யாரேனும் ஒருவரைச் சொல்லியே ஆகவேண்டும் என்று சொல்வதானால் அணித்தலைவர் கோலியைச் சொல்லலாம். இன்னமும் கேதார் ஜாதவ் என்ற கூடுதல் சுமையைச் சுமந்து கொண்டு இருப்பது ஒரு முக்கிய காரணம். வெற்றி பெறும் இணையை மாற்றக் கூடாது என்ற பழமையான மனநிலை வேறு! அதே மாதிரி பார்த்தால் ஜடேஜா மாதிரியான ஸ்லோ லெஃப் ஆர்ம் பந்து வீச்சாளர்களை, இடக்கை மட்டையாளார்கள் பிட்சில் இருந்தால் உபயோகிக்கவே மாட்டார்கள். பொறுப்பாகப் புள்ளிகள் வரட்டும் என்று காத்துக் கொண்டே இருப்பார்கள். வின்ஸ் என்ற ஒரே ஒரு பிளேயர் இருந்ததாலேயே படு மொக்கை அணியாகக் காணப்பட்ட இங்கிலாந்து அணி, ராய் வந்த பின்பு முரட்டுத்தனமான அணியைப் போல ஒரு தோற்றத்தைத் தருகிறது. உங்களை மாதிரி நான் லூசு இல்லைடா என்று மோர்கன் செய்த மிக முக...
20000 ரன்கள் – விராத் கோலியின் சாதனை

20000 ரன்கள் – விராத் கோலியின் சாதனை

சமூகம்
இந்தியாவிற்கு அடுத்து இந்திய ரசிகர்களுக்குப் பிடித்த அணி என்றால் அது மேஏகு இந்தியத் தீவுகள் அணிதான். முதல் மூன்று உலகக்கோப்பையில் கோலாச்சிய மேற்கு இந்தியத் தீவுகள், இந்த முறை நேரடியாகத் தகுதி பெற முடியாமல், தகுதி சுற்றின் மூலமாக இடம் பெற்றது, அதுவும் இரண்டாவது அணியாக. விவியன் ரிச்சார்ட்ஸ், வால்ஷ், லாரா, என ஐ.பி.எல் முன்னரே மேற்கு இந்தியத் தீவு வீரர்களுக்கென தனி ரசிகர் கூட்டம் இந்தியாவில் உண்டு. ஐ.பி.எல்.க்கு பின்னர் இது இன்னும் பலமடங்கு பெருகியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் உலகக்கோப்பையில் சந்தித்த முதல் தோல்வி, இந்தியாவிற்கு எதிராக தான் 1983 லீக் சுற்று நடந்தது. பெரிய அணிகளுக்கு எதிராக இந்தியா உலகக்கோப்பையில் பெற்ற முதல் வெற்றியும் இது தான். இந்த உலகக்கோப்பையில் தன் முதலாட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சால் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள், அதன் பிறகு தொடர்ச்சியாக...