Shadow

Tag: இந்திரஜா

கூரன் விமர்சனம்

கூரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கூரன் என்றால் கூர்மையான அறிவை உடையவன் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால், இப்படத்தில் கூர்மையான அறிவைக் கொண்டுள்லதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது ஒரு பெண் நாயாகும். தன் குட்டியைக் காரில் மோதிக் கொல்லுபவனுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது ஜான்சி எனும் நாய். நாயின் அந்த வேதனையைப் புரிந்து, நாயின் சார்பாக வழக்காடுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். நாய்க்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் கதை. கொஞ்சம் நம்ப முடியாத கதை என்றாலும், திரைக்கதையின் மூலமாகப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும்படி படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதை, வசனமெழுதி நடித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரை ‘குருவே’ என்றழைத்துக் கொண்டு அவரது வீட்டில் வளர்கிறார் இந்திரஜா. சந்திரசேகர் இந்திரஜாவை எப்பொழுதுமே ‘குண்டம்மா’ என்றே அழைக்கிறார். பெட்டிக்கடையில் ஒருவன் இந்திரஜாவின் உடலைக் கேலி செய்யும் விதமாகப் பேசி, ‘குட்டி யானை’ எனும் விளிக்கும்பொழுது, அவன...
“அம்மாவாகவே வாழும் சரண்யா அக்கா” – சூரி | விருமன்

“அம்மாவாகவே வாழும் சரண்யா அக்கா” – சூரி | விருமன்

சினிமா, திரைச் செய்தி
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’. இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. நடிகை இந்திரஜா, “இப்படத்தில் சூரி மாமாவிற்கு ஜோடியாக நடிக்கிறேன். ஆனால், உங்கள் அனைவருக்கும் தெரியாத ரகசியம் அவர் மடியில் அமர்ந்துதான் நான் 2 ஆவது மொட்டை அடித்தேன். என்னை அழகாகக் காண்பித்த ஒளிப்பதிவாளர் செல்வா சாருக்கு நன்றி” என்றார். நடிகை சரண்யா, “பெரும் நம்பிக்கையுடன் இப்படத்தில் நடித்திருக்கிறேன். கார்த்தியுடன் ஏற்கனவே அம்மாவாக நடித்திருக்கிறேன். இப்படத்தில் நடித்ததும் மகிழ்ச்சி....
#PV999 – பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே

#PV999 – பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே

சினிமா, திரைத் துளி
ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பு சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே' படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஜனவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. நாயகன் ராஜ் கமலின் மனைவி நடிகை லதா ராவ் பேசும்போது, "என் கணவர் நடித்ததால் என்று மட்டும் சொல்லவில்லை. உண்மையிலேயே இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் தான். படத்தின் தலைப்பைக் கேட்டபோது முதலில் நான் அதிர்ந்தேன். இது என்ன தலைப்பு என்று எனக்குக் கோபமாக வந்தது. அவர் பேசிய பிறகுதான் புரிந்தது. இந்தப் படம் பார்த்த பிறகு பெண்களுக்குச் சுற்றிலும் உள்ள மனிதர்களால், பழகும் மனிதர்களால் உள்ள ஆபத்தைப் பற்றி யோசிக்க வைக்கும். நல்லவர்கள் தானே என்று நம்பும் நாம் அவர்களைப் பற்றி சரியானவர்கள் தானா என்று சிந்திக்க வைக்கும். யாராவது படத்தைப் பார்த்த ஒரு பெண் யோசித்த...
‘துரத்தும் பட்டாசு பாலு’ – பசுபதி | இயக்குநர் பேரரசு

‘துரத்தும் பட்டாசு பாலு’ – பசுபதி | இயக்குநர் பேரரசு

சினிமா, திரைத் துளி
ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பு சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே' படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஜனவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு, “சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம். அதில் மக்களை சந்தோஷப்படுத்தும் பொழுதுபோக்கு அம்சங்கள் தான் இருக்க வேண்டும். கருத்து சொல்லவேண்டும், விழிப்புணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எடுத்துக் கொண்டிருந்தால் பொழுதுபோக்கு தளத்தை விட்டு சினிமா விலகிவிடும். அப்புறம் மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்காது. சினிமா சரியாக இருக்கிறது என்றால் பொழுதுபோக்கு படங்கள் வந்தால் தான் சரியான பாதையில் செல்கிறது என்று அர்த்தம். இங்கே வந்திருக்கும் ரோபோ சங்கர் மகளைப் பார்க்கும்போது எனக்கு அவர் பிகில் படத்தில் நடித்...