Shadow

Tag: இந்துஜா

பார்க்கிங் விமர்சனம்

பார்க்கிங் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மனிதனின் அடிப்படை குணங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று காமம், மற்றொன்று கோபம். இந்த இரண்டு உணர்ச்சிகள் மட்டும் தான் அடிப்படையான உணர்ச்சிகள். மற்ற உணர்ச்சிகளான காதல், அன்பு, பாசம், நேசம், பொறுமை, விட்டுக்கொடுத்தல், இரக்கம் காட்டுதல் இப்படி எல்லா உணர்வுகளும் நம் கற்பிதங்களால் மனிதனுக்குள் வளர்க்கப்பட்ட விடயங்களே.  இது போன்ற உணர்வுகளை நாம் தலைமுறை தலைமுறையாக கற்பித்துக் கற்பித்து, இன்று மனித இனம் இந்த நிலைமைக்கு வந்து நிற்கின்றது. இதிலிருந்து இன்னும் மேம்பட்டு உயர் நிலைக்குச் செல்வதே மனிதனுக்கும் மனிதகுலத்திற்கும் பெருமை. ஆனால் ஒரு சூழலில் அதுவும் குறிப்பாக ஈகோ நம் மனதிற்குள் நுழையும் போது, மற்ற எல்லா உணர்வுகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு நம் மனதிற்குள் இருக்கும் அடிப்படை உணர்வுகளில் ஒன்றான கோபத்திற்கு மட்டும் நாம் தீனி போடத் துவங்கினால் நாம் முற்றிலும் மனிதத்தை இழந்து மிருகமாக மாறிவிடுவோம...
“எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கு” – ஹரிஷ் கல்யாண் | பார்க்கிங்

“எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கு” – ஹரிஷ் கல்யாண் | பார்க்கிங்

சினிமா, திரைச் செய்தி
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ், “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளைக் கவனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்சன். அவரை டார்ச்சர் செய்துதான் அவரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அவருக்கு நன்றி. நான் தனியாக படம் எடுக்க வேண்டும் என நினைத்தபோது உதவிய அருண் பாலாஜி, நந்தகுமார் இரண்டு பேருக்கும் நன்றி. நான் செய்த ‘பலூன்’ திரைப்படம் எனக்கு திருப்தியாக இல்லை. அந்த சமயத்தில் விஜய்சேதுபதி, திலீப் சுப்பராயன் என்னைத் தய...
இந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்

இந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்

மற்றவை
‘உதவும் உள்ளங்கள்’ என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் சுமார் 1222 குழந்தைகள் “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அக்டோபர் 20 அன்று நடந்த இந்நிகழ்வில் நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர். நிகழ்வில் நடிகை இந்துஜா பேசியபோது, “இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டமாக தளபதி விஜய் நடித்த பிகில் படம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் நடிப்பதற்கு என்னை அணுகிய போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன். மேலும் இந்த அமைப்பின் நிறுவனர் திரு. சங்கர் மகாதேவன், மற்றும் இந்த அமைப்பின் நலம் விரும்பி திருமதி கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார். நிகழ...
சூப்பர் டூப்பர் திரைப்படம்

சூப்பர் டூப்பர் திரைப்படம்

சினிமா, திரை விமர்சனம்
சூப்பர் என்பது விலை மதிப்புமிக்க போதைப் பொருள் ஒன்றின் பெயர். டூப்பர் என்பது, ஏமாற்றுக்காரனான தன்னைத் தானே நாயகன் அழைத்துக் கொள்ளும் ஒரு பட்டப்பெயர். நிழலுலகத்து மைக்கேலிற்குச் சொந்தமான சூப்பர், டூப்பரிடம் சிக்கிக் கொள்கிறது. மைக்கேல் சூப்பருக்காக டூப்பரைத் துரத்த, டூப்பர் மைக்கேலிடம் இருந்து தப்பித்து, பின் சூப்பர் டூப்பர் அவதாரமெடுத்து, மைக்கேலைத் தன் வழியிலிருந்து அகற்றுவதுதான் படத்தின் கதை. கோமாளி படத்தில் மனநல மருத்துவராக நடித்திருக்கும் சாரா, இப்படத்தில் இரட்டை வேடத்தில் வருகிறார். நாயகனின் மாமாவாக மீசை வைத்தும், ஐபிஎஸ் விக்ரமாக மீசை இல்லாமலும் வருகிறார். ஷிவா ஷா ரா எனத் திரையில் அவரது பெயரும் நீளம் பெற்றுள்ளது. பேசியே கொல்கிறார், ஆனால் நகைச்சுவைக்குக் கொஞ்சமும் உதவவில்லை. இந்தப் படத்தில் இவர் ஏன் இரண்டு பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள அடுத்த பாகத்திற்குக் காத...
மகாமுனி விமர்சனம்

மகாமுனி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மகாமுனி என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர் கெளதம புத்தர். இந்தியப் புராணங்களிலும் இதிகாசங்களிலும் தேடினால் சில பெயர்கள் கிடைக்கலாம். ஆனால், மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவைப் பொறுத்தவரை, மகாமுனி என்றால் புத்தர்தான். சத்திரியனாக இருந்து துறவு மேற்கொண்டு முனியானவர் என்பதைப் படத்தோடு பொருத்திக் கொள்ளலாம். சகோதரர்களான முனிராஜும் மகாதேவனும் சிறு வயதிலேயே பிரிந்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரின் வாழ்வும் ஒரு புள்ளியில் இணைந்து மகாமுனியாய் பரிமாணம் பெறுவதுதான் படத்தின் கதை. இயக்குநர் சாந்தகுமார், படம் தொடங்கியதுமே ஒரு கனமான போர்வையைப் பார்வையாளர்கள் மீது படர விடுகிறார். இறுதி வரை அதை விலக்க முடியாமல், பார்வையாளர்கள் அதன் கனத்தைச் சுமந்தவண்ணமுள்ளனர். அடுத்து என்ன என்ற பதைபதைப்போ, சுவாரசியமோ இல்லை. திரையில் காணும் பிரதான கதாபாத்திரங்களோடு பார்வையாளர்களால் தங்களைப் பொருத்திப் பார்த்துக...
பூமராங் விமர்சனம்

பூமராங் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆஸ்திரேலியப் பழங்குடியினர்கள் (aboriginals) பயன்படுத்திய எறி ஆயுதத்தின் பெயர் தான் பூமராங். அவற்றை வீசி எறிந்தால், இலக்கைத் தாக்கிவிட்டு மீண்டும் வீசியவரிடமே திரும்பும். பழந்தமிழர்களிடமும், இதே தொழில்நுட்பத்திலான "வளரி" எனும் ஆயுதம் உபயோகத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த ஆயுதத்திற்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தலைப்பைக் குறியீட்டுப் பெயராகத்தான் புரிந்து கொள்ள வேண்டும். "லைஃப் இஸ் எ பிட்ச்" என்ற க்ளைமேக்ஸில் வில்லனிடம் சொல்ல வந்து, பிட்ச் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், 'லைஃப் இஸ் எ பூமராங்' என்பார் படத்தின் நாயகன். எந்த வினையை விதைத்தானோ அதே வினையால் அறுக்கப்படுவான் என்கிற பொருளில் புரிந்து கொள்ளவேண்டும். அதாவது, இரண்டு நதிகளை இணைப்பதில் ஈடுபடும் சக்தி என்பவரைக் கொன்ற வில்லனை, சக்தியின் முகத்திலேயே வந்து பழி தீர்க்கிறார் சிவா. யாரைக் கொன்றாரே, அவரே ...
மெளனகுரு சாந்தகுமாரின் மகாமுனி

மெளனகுரு சாந்தகுமாரின் மகாமுனி

சினிமா, திரைத் துளி
ஸ்டூடியோ க்ரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K.E .ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’. இதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கெனவே மௌனகுரு என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற VJ சாபு ஜோசப் படத்தைத் தொகுக்க, ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். சண்டைப் பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், “க்ரைம் த்ரில்லர் ஜானரில் ‘மகாமுனி ’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்துத் தரப்பினரையும் கவரும் வக...
பில்லா பாண்டி விமர்சனம்

பில்லா பாண்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அஜீத்தின் தீவிர ரசிகர் பில்லா பாண்டி. அவரும், அவரது அத்தை மகள் சாந்தினியும் ஒருவரை ஒருவர் காதலிக்க, பாண்டியை ஒருதலையாகக் காதலிக்கும் இந்துஜாவால் பாண்டிக்கு மிகப் பெரும் பிரச்சனை எழுகிறது. சூழ்நிலைகள்மிக மோசமாகி, 'தல'ச்சாமியின் அருள் அவரை எப்படிக் காப்பாற்றுகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் கதை இடைவேளையில் தான் தொடங்குகிறது. அதுவரை, மேஸ்திரியாக வரும் தம்பி ராமையாவின் 'மீ டூ' அத்தியாயங்கள் கொலையாகக் கொல்கிறது. 'கருப்பட்டி மிட்டாய் வாங்கிக் கொடுத்தால் போதும். யாரை வேண்டுமானாலும் சம்மதிக்க வைத்துவிடுவேன்' என படத்தின் 35% நீளம் அவருக்காக மட்டுமே ஒதுக்கப்படுகிறது. படத்தின் நீளம் குறைந்தாலும் பரவாயில்லையென, நகைச்சுவை என்ற பெயரில் தம்பி ராமையா செய்யும் அசட்டுத்தனங்களைக் கத்தரித்து எறிந்திருக்க வேண்டும் படக்குழு. காமெடியனுக்கும், வில்லனுக்கும்  கேரக்டர் டீட்டெயிலிங்கில் பெரிய வித்தியா...
60 வயது மாநிறம் விமர்சனம்

60 வயது மாநிறம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'கோதி பண்ணா சாதார்ணா மைக்கட்டு (Godhi Banana Sadharna Mykattu)' என்ற படம் கன்னடத்தில், 2016 இல் வெளிவந்தது. 'கோதுமை நிறம் சாதாரண உடற்கட்டு' என்பது அந்தக் கன்னடப்படத் தலைப்பின் பொருள். இயக்குநர் ராதாமோகன், '60 வயது மாநிறம்' எனத் தமிழில் மீள் உருவாக்கம் செய்துள்ளார். அல்சைமர் நோயால் பாதிக்கப்படும் 60 வயது கோவிந்தராஜ் காணாமல் போய்விடுகிறார். அவரையொரு பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துவிட்டிருக்கும் அவரது மகன் சிவா, தனது அலட்சியத்தால் தந்தையைத் தொலைத்துவிட்டோமெனத் தேடி அலைகிறான். சிவாவின் தந்தை எங்குப் போனார், எப்படிக் கிடைத்தார் என்பதுதான் படத்தின் கதை. ராதாமோகன் மீண்டும் ஒருமுறை தன் மேஜிக்கை நிகழ்த்திக் காட்டியுள்ளார். ராதாமோகனின் ஆஸ்தான நடிகரான குமரவேல் அறிமுகமான நொடி முதல் படம் கலகலப்பாகிறது. கொலைக்காரர்களான சமுத்திரக்கனியிடமும், அவரது அசிஸ்டென்ட்டிடமும் மாட்டிக் கொள்ளும் குமரவேலின் கவுன்ட...
மெர்க்குரி விமர்சனம்

மெர்க்குரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘நிசப்தம் தான் வலுமிகு அலறல்’ என்ற கேப்ஷனோடு படம் சத்தமின்றித் தொடங்குகிறது. வசனங்களற்று தொழில்நுட்பம் கோலேச்சும் அற்புதமான முயற்சி. அப்படியும் முதற்பாதியில் தமிழ் சப்-டைட்டில் வருகிறது. கதையைப் படித்துப் புரிந்து கொள்ளுமாறு செய்கின்றனர். ஒருவழியாக ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து, இடைவேளைக்குப் பிறகு சப்-டைட்டிலுக்கும் குட்பை சொல்லிப் பெருமைப்படுத்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். கதைக்களனும், கதையின் மாந்தர்களும், திரையின் நிறமும் மிகவும் புதிது. ஃப்ரேமில் பரவி நிற்கும் பச்சை நிற பின்புலம் திகிலையும் அமானுஷ்யத்தன்மையையும் தருகிறது. பச்சை நிற பின்புலம் பசுமையின் செழுமையாக இல்லாமல், மெர்க்குரியின் நச்சுத்தன்மையைக் குறிக்கிறது. அதனால் ஒரு நகரமே எப்படிப் பாதிக்கப்படுகிறது என நடுக்கம் தருமளவு சித்தரித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். காது கேளாதவர்களை நடித்திருக்கும் சனந்த், இந்து...
மேயாத மான் விமர்சனம்

மேயாத மான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மேயாத மான் என்ற தலைப்பு மிகவும் ஆச்சரியமூட்டுகிறது. ஏன் பரவசமூட்டுகிறது என்று கூடச் சொல்லலாம். தலைப்பு விஷயத்திலேயே நாயகன் ஓர் அடிப்படை நேர்மையைக் கடைபிடித்துள்ளார் என்றே தோன்றுகிறது. 'ஸ்ரீவள்ளி (1945)' படத்தில் வரும் பாடல் வரியில் இருந்து தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. முருகன் வள்ளியைக் கரெக்ட் செய்யப் பாடும் பாடலில், வள்ளியினது கற்பைப் போற்றும் வகையில் வரும் பதம்தான் 'மேயாத மான்'. அதாவது படி தாண்டா விர்ஜின் கேர்ள் என்பதன் கவித்துவ பதம் தான் மேயாத மான். ஆனால் இதையே இயக்குநர் ரத்ன குமார், நாயகன் தான் மேயாத மான் என மிகச் சாதுரியமாக நிறுவுகிறார். ஒரே வகுப்பில் படித்தும், மூன்று வருடமாக நாயகியிடம் காதலைச் சொல்லாத நாயகன் (இதயம் முரளி) தான் மேயாத மேனாம். கண் முன் புல்லுக்கட்டு இருந்தும் அதை மேயாதவன், அதாவது காதலைச் சொல்லாததால் நாயகன் மேயாத மேனாம். அடடே.! ஆனால், நாயகனுக்கு ஏன் நாயகியைப் பிடிக்...