வியப்பூட்டும் ஆலயங்கள்
விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன் புத்தூரில் தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில், சிவனுக்கு முன்புறமாக உள்ள நந்திக்கு இடப்பக்கக் காது இல்லாதிருப்பதால் "செவி அறுந்த நந்தி தேவர்'' என்று பெயர்.
மௌண்ட் அபுவில் (குஜராத்) அச்சல் கட் என்ற இடத்திலுள்ள அஞ்சலேஷ்வர் என்ற கோயிலில் லிங்கத்துக்குப் பதில் ஈஸ்வரனின் வலதுகால் கட்டை விரல் காணப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் உள்ள நந்தி 4320 கிலோ எடை கொண்ட பஞ்சலோகத்தினால் ஆனது.
கும்பகோணத்தை அடுத்துள்ள சுந்தரப் பெருமாள் கோயிலிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திரு நல்லூர் திருத்தலம். அத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.
உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான அஜ்மீர் தர்ஹாவில் உலக அதிசய...