Shadow

Tag: இனிமேல் பாடல்

இனிமேல் ஆல்பம் பாடல் – 10 மில்லியன் பார்வைகள்

இனிமேல் ஆல்பம் பாடல் – 10 மில்லியன் பார்வைகள்

சினிமா, திரைச் செய்தி
கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் உருவான 'இனிமேல்' பாடலில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமானார். நடிகையும் இசையமைப்பாளருமான ஸ்ருதி ஹாசனின் வடிவமைப்பில் உருவான இனிமேல் ஆல்பம் பாடல் தற்போது யூடியூப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. கடந்த மார்ச் 25 ஆம் தேதி அன்று வெளியானது இந்தப் பாடல். ஸ்ருதி மற்றும் லோகேஷ் ஆகியோரின், ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் நடிப்பில், இந்தப் பாடல், இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கையைப் படம்பிடித்து காட்டுகிறது. இந்த ஆல்பம் பாடல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ‘இனிமேல்’ பாடல் மாடர்ன் உலக இளைஞர்களின் காதலின் அனைத்து நிலைகளையும் அதன் அனைத்து ஏற்ற இறக்கங்களுடனும் சித்தரிக்கிறது. இப்பாடல் ஒரு சமகால காதலின் வடிவத்தைக் கச்சிதமாகப...
‘இனிமேல்’ பாடல் | காதலின் மாயையிலிருந்து தீர்வை நோக்கி

‘இனிமேல்’ பாடல் | காதலின் மாயையிலிருந்து தீர்வை நோக்கி

சினிமா, திரைச் செய்தி
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “இனிமேல்” ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளரும் நடிகையுமான ஸ்ருதிஹாசன், “முதலில் நான் ‘இனிமேல்’ என்கின்ற இந்தப் பாடலை ஆங்கிலத்தில் தான் எழுதத் துவங்கினேன். எழுதத் துவங்கும் போதே ரிலேஷன்ஷிப் தொடர்பாக எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. ரிலேஷன்ஷிப் என்பது எப்படி ஒரு Loop ஆகச் செயல்படுகிறது, அந்த உறவுகளுக்குள் நிகழும் Ups And Downs இவைகளைப் பற்றியும் சொல்ல முற்பட்டேன். பின்னர் எனக்கு ஒரு கட்டத்தில் அந்த ‘இனிமேல்” என்கின்ற வார்த்தையைப் பின் தொடர்ந்து தமிழில் இதை எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் மேலெழுந்தது. பின்னர் என் அப்பா இ...