Shadow

Tag: இன்னாசி பாண்டியன்

டைரி விமர்சனம்

டைரி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
டி-பிளாக், தேஜாவு போன்ற த்ரில்லர் படங்களுக்குப் பிறகு, ஒரு சூப்பர் நேட்சுரல் த்ரில்லரில் நடித்துள்ளார் அருள்நிதி. பதினாறு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொலை – கொள்ளைச் சம்பவத்தை விசாரிக்க ஊட்டி வருகிறார் உதவி ஆய்வாளர் பயிற்சியில் இருக்கும் வரதன். வழக்கு சம்பந்தமாக மிகச் சிறிய துப்பு கிடைக்கும் பொழுது, அவரது கார் காணாமல் போகிறது. காரைத் திருடியவனைத் தேடும் வரதன், ஒரு பேருந்தில் ஏறுகிறார். பேருந்தில், அவர் விசாரிக்கும் வழக்கு சம்பந்தமான நகைகள் கிடைப்பதோடு, அமானுஷ்யமாகப் பல சம்பவங்கள் நிகழ்கின்றன. அமானுஷ்ய சம்பவங்களுக்கும், பதினாறு வருடங்களுக்கு முன் நடந்த வழக்கிற்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மையக்கரு. திரைக்கதை, விசாரணையில் இருந்து விலகி, பேருந்திற்குள்ளேயே சிறிது நேரம் பயணிக்கிறது. வீட்டை விட்டு ஓடி வரும் காதல் ஜோடி, அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைக்கும் தோடர் மக்கள், மகனைப் பிரிந்...