
“நன்றி. ஜெய்ஹிந்த்!” – நிபுணன் அர்ஜூன்
நிபுணன் திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான பங்கு ஊடகங்களுக்கு உண்டென நன்றி தெரிவித்தது நிபுணன் படக்குழு.
"நிபுணன் வரவேற்பிற்குக் காரணம் ஊடகத்தின் நேர்மையான விமர்சனமே! அதனுடன் மக்களின் கருத்தும் ஒன்றிப் போனது இந்தப் படத்தின் வெற்றிக்குப் மிக பெரிய அடித்தளமாகும்" என்றார் தயாரிப்பாளர் உமேஷ்.
“ நிபுணன் படம் 2015-இல் தொடங்கிய பின் இரண்டு வெள்ளங்களைப் பார்த்துவிட்டது. இந்தக் கதை எழுதும் போதே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்து வந்தது. அர்ஜூன் சாரின் 150ஆவது படத்தை இயக்கியது எனக்கு மிக மிகப் பெருமை. இந்தப் படத்தில் என்னுடன் பணி புரிந்த அனைத்து நடிக நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் இயக்குநர் அருண் வைத்யநாதன். மலையாளத்தில் தான் இயக்கிய பெருச்சாழி போல், தமிழில் ‘பொலிட்டிகல் சட்டையர்’ படமெடுக்க ஆவல் இருப்பினும், அப்படம் எடுத்தால் த...