பாம்புசட்டை – சமூகத்தின் மகிழ்ச்சி!
சமீபத்தில் வெளியான பாம்புசட்டை திரைப்படம், ரசிகர்களிடயே வரவேற்பையும் மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றுக்கொண்டிருக்கிறது. எளிய மக்களின் கதை, விளிம்புநிலை மக்களின் கதை, யதார்த்தமான கதை, வசனங்கள் அபாரம் எனக் கொண்டாடப்பட்டாலும் தாமதமான வெளியீடு, வெளியீட்டுப் பிரச்சினை என ஒரு போராட்டத்திற்குப் பின்பே தன் முதல் திரைப்படம் மக்கள் பார்வைக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்கிறார் இயக்குநர் ஆடம் தாசன். இயக்குநர் ஷங்கருடன் எந்திரன், அந்நியன், சிவாஜி படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஆடம் தாசனுக்கு பாம்புசட்டை, இயக்குநராக முதல் திரைப்படம்.
பாம்புசட்டை படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். அதெப்படி நடந்தது?
என் வீடு இருக்கும் தெருவில் தினமும் காலையில் தெருவைச் சுத்தம் செய்து குப்பைகளை அள்ளிச் செல்ல ஒரு இளம்பெண் வருவாள். மிக அழகாக இருப்பாள். அந்தப் பெண்ணுக்கு ஒரு காதல் ...