Shadow

Tag: இயக்குநர் ஆனந்த் ஷங்கர்

நோட்டா விமர்சனம்

நோட்டா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஷான் கருப்புசாமியின் வெட்டாட்டம் நாவல் அப்படியே படமாக ஆனந்த் ஷங்கரால் எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வினோதன் தனது மகன் வருணிடம் முதலமைச்சர் பதவியை, இரண்டு வாரத்திற்குக் கைமாற்றிவிட்டு தன் மீது நீதிமன்றதிலுள்ள வழக்கைச் சந்திக்கத் தயாராகிறார். வழக்கின் தீர்ப்பு வினோதனுக்குப் பாதகமாகி விட, வருண் முதலமைச்சர் பதவியில் நீடிக்குமாறு ஆகிவிடுகிறது. சொந்த கட்சி ஆட்களின் அத்துமீறல், இயற்கைச் சீற்றம், குடும்பத்தின் மீதான உயிர் அச்சுறுத்தல் என வருண் தனக்கு முன்னுள்ள சவால்களை எல்லாம் எப்படிச் சமாளிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. சமகால அரசியல் பகடியும், ரெளடி முதல்வராக வரும் விஜய் தேவரகொண்டாவும் தான் படத்தின் பலம். விஜய் தேவரகொண்டாவைச் சுலபமாய் ஏற்றுக் கொள்ள முடிகிறது. படம் அவரைச் சுற்றித்தான் நடக்கிறது, என்றாலும் அவரைத் தவிர வேறு எவருக்குமே முக்கியத்துவம் தராதது ஏன் எனத் தெரியவில்லை? படம் அடுத்த...
இருமுகன் விமர்சனம்

இருமுகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லவ் எனும் தீவிரவாதி அன்பே இல்லாமல், தனது ‘ஸ்பீட்’ எனும் அண்ணீர் (adrenaline) ஊக்கி மருந்தை, உலகின் பயங்கரவாதக் குழுக்களுக்கு வினியோகம் செய்யத் திட்டமிடுகிறான். அதை உளவுத்துறை ரா (RAW) அதிகாரியான அகிலன் வினோத் முறியடிக்க முனைகிறார். நல்லவன் தீயவன் ஆகிய இந்த இரண்டு முகத்துக்கு (பேர்) இடையே நிகழும் சண்டை தான் படத்தின் கதை. ஸ்டைலிஷான ஹீரோ, மிக ஸ்டைலிஷான வில்லன் என இரண்டு வேடங்களில் வருகிறார் விக்ரம். லவ் எனும் பாத்திரத்தில் அவர் காட்டும் நளினமும் பாவனைகளும் ரசிக்க வைக்கின்றன. ஹாலிவுட் நாயகர்களைப் போலவே, ‘ஃபைட் கிளப்’ ஒன்றில் தாடியுடன் விக்ரம் அசத்தலாய் அறிமுகமாகிறார். அங்குத் தொடங்கி இடைவேளையில் வரும் ‘ட்விஸ்ட்’ வரை படம் மிக விறுவிறுப்பாய்ப் பயணிக்கிறது. அகிலன் பாத்திரத்தின் முரட்டுத்தனமான உடல்வாகிற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறார் விக்ரம். அகிலன் தாடியை எடுத்ததும், முகத்தில் கொஞ்சம் வயோதிக...