“இதழும் இதழும் இணையட்டுமே!” – இயக்குநர் ஆர்வா
சன்னி லியோன், யோகி பாபு, ஜி.பி.முத்து, தர்ஷா குப்தா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கும், ”ஓ மை கோஸ்ட்” என்ற படத்தை VAU மீடியா எண்டர்டெயின்ட்மென்ட் & White Horse Studios இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் தற்பொழுது ’அப்பா காண்டம்’ என்னும் குறும்படத்தை இயக்கிய ஆர்வாவின் இயக்கத்தில் ”இதழும் இதழும் இணையட்டுமே” என்ற பெயரில் ஒரு வெப்சீரீஸைத் தயாரித்திருக்கிறார்கள்.
இந்த வெப் சீரிஸில் கதாநாயகனாக ’பிளாக் ஷீப்’ கலையரசன் தங்கவேல், ’விஜய் டிவி’ அர்ச்சனா குமார், நியூஸ் 18 காம்பியரர் முபாஷீர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இது ஒரு வித்தியாசமான, நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகி இருக்கிறது. இந்த ”இதழும் இதழும் இணையட்டுமே” வெப்சீரிஸின் கதை ரசிகர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ”என்னடா.. ஒரு பெண், ஒரு ஆணிடம் இப்படி ஒரு விஷயத...