Shadow

Tag: இயக்குநர் உஷா கிருஷ்ணன்

ராஜா மந்திரி விமர்சனம்

ராஜா மந்திரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சூர்யா, கார்த்தி என பாசமிகு சகோதரர்கள் வாழ்க்கையில் நேரும் காதல் - கல்யாணக் குளறுபடிகள் தான் படத்தின் கதை. கல்யாணம் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் முதுமகன் (30 வயதைக் கடந்த ஆண்) சூர்யாவாக காளி வெங்கட். அவருக்குத் தம்பியாக கலையரசன் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தாலும், காளி வெங்கட்டுக்கே படத்தின் நாயகன் என்ற அந்தஸ்த்தைத் தர முடியும். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில், ‘எதிர்த்த வீட்டு காலிஃப்ளவரே!’ எனத் தொடங்கும் பாடலுக்கு காளி வெங்கட் காட்டும் முக பாவனைகள் அலாதியாக உள்ளது. படமும் அவரை மையப்படுத்தியே நகர்கிறது. எதிர் வீட்டுப் பெண்ணான மகாலட்சுமியாக நடித்திருக்கும் வைஷாலியிடம் அவர் வழிவதெல்லாம் ரசிக்கும்படியாக உள்ளது. காதலிக்கப்பட மட்டுமே என்றாலும், வைஷாலி அதிகமாக ஈர்க்கிறார். அத்தகைய ஈர்ப்புக்கு, அவர் லூசுப் பெண்ணாகச் சித்தரிக்கப்படாதது காரணமாக இருக்கலாம். அதை விடக் குறிப்பாக, எவ்விதப...