சசிகுமாருக்கு மும்பையில் கிடைத்த நெகிழ்ச்சி
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரிப்பில் சசிகுமார் நடிக்கும் "தயாரிப்பு எண் 3" மும்பையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதிரடி ஆக்ஷன் பொழுதுபோக்கு படமான இதில் சமீபத்தில் இணைந்த சரத்குமார் பங்கு பெறும் மிக முக்கியமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், நடிகர் சசிகுமார் மீது மும்பை வாழ் தமிழ் மக்கள் காட்டிய நிபந்தனையற்ற அன்பு அவரை வியப்பில் ஆழ்த்தியது.
இது குறித்து இயக்குநர் என்.வி.நிர்மல் குமார் கூறும்போது, "சசிகுமார் மும்பையின் நெரிசல் மிகுந்த சாலைகளில் சில ரவுடிகளை துரத்திக் கொண்டு ஓடி, அடிப்பது போன்ற ஆக்ஷன் காட்சிகளை நாங்கள் படமாக்கிக் கொண்டிருந்தோம். பொது மக்களுக்குத் தெரியாத வண்ணம் மறைக்கப்பட்ட கேமிராக்களைப் பயன்படுத்தி முழுக் காட்சியைப் படம்பிடிக்க முடிவு செய்தோம். இருப்பினும், இந்த சூழ்நிலையானது தலைகீழாக மாறியது. இது ஓர் உண்மையான மோதல் ...