2 11 17 சர்வதேசத் திரைப்பட விழா
இத்திரைப்பட விழா, திரைப்படம் சார்ந்து தமிழகத்தில் நிகழும் ஓர் அற்புதமான முயற்சி எனக் கண்ணை மூடிக் கொண்டு கூறலாம். அதற்குப் பல காரணங்களை முன் வைக்கலாம். அதில் பிரதானமானது, சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு வைக்கப்பட்ட, ‘2 11 17’ என்ற பெயரே!
‘பாரத ரத்னா’ அம்பேத்கர் அவர்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்ற எடுத்துக் கொண்ட காலம், 2 ஆண்டு 11 மாதம் 17 நாட்கள் ஆகும். அதை நினைவுகூரும் விதமாகவே, இந்தச் சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு 2 11 17 எனப் பெயர் வைத்துள்ளனர். இத்திரைப்பட விழா, FilmFreeway எனும் திரைப்பட விழா அமைப்பின் கீழ் இயங்குகின்றது.இவ்விழாவின் இன்னொரு சிறப்பம்சம், திரையிடல் முடிந்ததும், அப்படத்தின் இயக்குநரோடு கலந்துரையாடப் பார்வையாளர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றனர். மேற்கு வங்கம், ஈரான், பிரேஸில், லண்டன் என பன்னாட்டுக் கலைஞர்களுடனான உரையாடல், எல்லைகளைக் கடந்து கலையை ரசிப்...