Shadow

Tag: இயக்குநர் சக்தி. ஆர்

ஆலன் | காதலின் வாசத்துடன்

ஆலன் | காதலின் வாசத்துடன்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் சிவா. ஆர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' திரைப்படத்தில் ‘ஜீவி’ வெற்றி, மதுரா, விவேக் பிரசன்னா, ஹரிஷ் பெராடி, 'அருவி' மதன் குமார், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். கே. உதயகுமார் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் இந்தத் திரைப்படத்தின் படத்தொகுப்புப் பணிகளை காசி விஸ்வநாத் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகும் இந்தத் திரைப்படத்தை 3 S பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சிவா. ஆர் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் வெளியிட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்...