
“வெளிப்படையான விவாதத்தை வைக்கும் படம்” – வினீத் | காதல் என்பது பொதுவுடைமை
காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலேஷ், அனுஷா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், படத்தொகுப்பாளர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்தப் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் ‘பூ’ சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசுகையில், "படம் பார்த்ததும், படக்குழுவின் மீது ரொம்ப மரியாதை வந்துச்சு. ஒரு விஷயத்தை எடுத்து எவ்ளோ பொறுப்புணர்ச்சியோட பண்ண முடியுமோ அவ்ளோ கரெக்டா பண்ணியிருக்காங்க. அதே சமயம் ஆடியன்ஸ்க்குத் தேவைப்படுற சுவாரியசமும் படத்தில் இருந்தது. படம் முடியும் வரையிலுமே நான் என்ஜாய் பண்ணேன். நான் பார்த்தப்போ, க்வியர் கம்யூனிட்டியில் இருந்து நிறைய பெண்கள் வந்திருந்தாங்க. ரொம்...