Shadow

Tag: இயக்குநர் சதீஷ் கர்ணா

‘டைம் இல்ல’ – மிகப் பெரிய நம்பிக்கை துரோகம்

‘டைம் இல்ல’ – மிகப் பெரிய நம்பிக்கை துரோகம்

சினிமா, திரைத் துளி
அறிமுக இயக்குநர் சதீஷ் கர்ணா என்பவரது இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் ‘டைம் இல்ல’. இந்தப் படத்தைத் தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தவர் மனோ பார்த்திபன். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து சென்சார் ஆன பிறகு இப்படத்தை இயக்கிய சதீஷ் கர்ணாவை இப்படத்தில் தூக்கிவிட்டு, தயாரிப்பாளர் மனோ பார்த்திபன் தானே இயக்குநர் என்றும் பேர் போட்டுக் கொண்டார். மேலும், இப்படத்தில் சதீஷ் கர்ணா நடித்த காட்சிகளையும் நீக்கி விட்டு அதில் மொட்டை ராஜேந்திரனை நடிக்க வைத்து, மீண்டும் சென்சார் செல்லவிருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. “இது என்ன மாதிரியான திருட்டு வேலை?” என்று தெரியாமல் புலம்புகிறார் இயக்குநர். ஒரு படத்தை இயக்குவது என்பதைத் தனது வாழ்நாள் லட்சியமாக எடுத்து உழைக்கும் இயக்குநருக்குக் இப்படிப்பட்ட அநியாயம் நிகழ்ந்தது மிகப்பெரும் கொடுமை. தயாரிப்பாளரிடம் இயக்குநர் விளக்கம் கேட்டதற்கு, ...