Shadow

Tag: இயக்குநர் சர்ஜுன்

ஐரா விமர்சனம்

ஐரா விமர்சனம்

மற்றவை
'ஐரா' என்றால் யானையின் குறியீடு என்கிறார் இயக்குநர் சர்ஜுன். 'என்னது ஐரான்னா யானையா?' என வாய் பிளந்தால் ஐராவதம் என்கிறார். இதென்ன இந்திரனின் வெள்ளையான வாகனத்துக்கு வந்த சோதனை எனக் குழம்பி, யானையின் ஞாபகச்சக்திக்கும், பழிவாங்கும் குணத்திற்குமான குறியீடாகத் தலைப்பை உருவகப்படுத்திக்க வேண்டியுள்ளது. விபத்தில் இறந்துவிடும் கருப்பு நயன்தாராவான பவானியின் பழிவாங்கும் படலம் தான் ஐரா படத்தின் ஒரு வரிக் கதை. பட்டாம்பூச்சி எனப் படத்திற்குப் பெயர் வைத்திருந்தால் மிகப் பொருத்தமானதாய் இருந்திருக்கும். படத்தின் தொடக்கம் முதலே பட்டாம்பூச்சி முக்கிய பாத்திரமாக சோலோவாகவும், கும்பலாகவும் வருகின்றன. படத்தின் ஆதாரக் கருவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள வைக்கச் சிரமப்படுகிறார் கதை, திரைக்கதை எழுதியுள்ள பிரியங்கா ரவீந்திரன். ஆதலால், நயன்தாரா முதன்முதலில் இரு வேடங்களில் நடித்திருந்தும் மனதில் பதியவில்லை. ஓர் அழுத்தமான...
ஐரா – இரட்டை வேடத்தில் நயன்

ஐரா – இரட்டை வேடத்தில் நயன்

சினிமா, திரைத் துளி
தொடர்ந்து தன்னுடைய தோற்ற பொலிவாலும், சீரிய நடிப்பு திறமையினாலும் திரை வர்த்தகத்தில் மட்டுமன்றி, ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து தன்னுடைய ஆளுமையைச் செலுத்தி வரும் நயன்தாரா தன்னுடைய அடுத்த படமான "ஐரா" படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அறம் படத்தைத் தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன் கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ப்ரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்க, கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷ் படக்தொகுப்பு செய்ய, அவள் படத்தின் கலை இயக்குநர் சிவசங்கர் அரங்கு அமைக்க, டி. ஏழுமலை நிர்வாக தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன் கலை அரசன், யோகி பாபு, ஜே பி ஆகியோருடன் பலர்...
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சனம்

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காஷ்மீர் ஆசிபா, அயனாவரம் சிறுமி போன்றவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கண்ணுறும்பொழுது, மனிதரகள் இவ்வளவு ஆபத்தானவர்களா என்ற நடுக்கம் அடிமனதில் இருந்து எழுந்தது. சக மனிதர்கள் என்று மனதில் எழும் நெருக்கம் மெல்ல அமிழ்ந்து, இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்ற எண்ணம் எழுகிறது. ஆனால், படத்தில் வரும் கதாபாத்திரங்கள் யாரும் அத்தகைய பயத்தை விதைப்பவர்களில்லை. சிறை சென்றுவிட்டு வரும் மாமன் டேவிட்டும், ரோட்டில் அநாதையாகத் திரிந்து அடிபட்டு வளரும் மருமகன் தாமஸும் இணைந்து ஸ்வேதாவைக் கடத்துகின்றனர். ஸ்வேதா, தாமஸின் காதலி. ஸ்வேதாவும், தாமஸும் இணைந்து டேவிட்டை ஏமாற்றி எல்லாப் பணத்தையும் சுருட்ட முடிவு செய்கின்றனர். யார் யாரை ஏமாற்றுகின்றனர் என்பதே படத்தின் கதை. ஃபிரான்சிஸ் டி'செளசாவாக யோகி பாபு நடித்துள்ளார். தாமஸின் ரூம் மேட்டாக வரும் இவர் நகைச்சுவைக்குப் பெரிதும் உதவிடவில்லை. ஸ்வேதாவின் அப்பாவாக ஜெயக...
இயக்குநர் சர்ஜுனின் எச்சரிக்கை

இயக்குநர் சர்ஜுனின் எச்சரிக்கை

சினிமா, திரைச் செய்தி
நல்ல படங்களைக் கண்டுபிடித்து அதை முறைப்படி மொத்தமாக வாங்கிச் சிறப்பாக வெளியிட்டு நல்ல விநியோகஸ்தர் என்று பெயரெடுத்த கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் வி.சத்யமூர்த்தியிடம் 'எச்சரிக்கை'யாகத் தனது படத்தை ஒப்படைத்துவிட்டது படக்குழு. தப்பு தண்டா படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.சத்யமூர்த்தி. அதற்குப் பிறகு சுசீந்திரன் இயக்கிய 'நெஞ்சில் துணிவிருந்தால்', விஜய்சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' , விஜய் மில்டனின் 'கோலிசோடா 2' போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட சத்யமூர்த்தி தற்போது "எச்சரிக்கை - இது மனிதர்கள் நடமாடும் இடம் " படத்தைப் பார்த்துப் பாராட்டியதுடன் மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார். டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து இப் படத்தைத் தயாரித்துள்ளனர். இயக்குநரான சர்ஜுன் யூ-டியூப்பில் பிரபலமான மா,...