BOAT படம் எப்படி உருவானது? – இயக்குநர் சிம்புதேவன்
நடுக்கடலில் உருவான நெய்தல் நிலக்கதையான 'போட்' படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படம் எப்படி உருவானது என்பது பற்றி இயக்குநர் சிம்புதேவன்,
''நான் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் ஃபேன்டஸி, காமெடி என வித்தியாசமான வகைமையில் இருக்கும். இந்தப் படத்திலும் இவை இரண்டும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நல்ல வாய்ப்பை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் பிரேம்குமார் தான் வழங்கினார். அவரை முதன்முதலாக சந்தித்து அரை மணி நேரம் இந்தக் கதையை விவரித்தேன். இந்தக் கதை என் மனதில் நீண்ட நாளாக இருக்கும் கதை.
கொரோனா காலகட்டத்தின் போது நான் எழுதிய 'கசடதபற' எனும் படைப்பு வெளியானது. அந்தத் தருணத்திலேயே 'போட்' கதையை எழுதிக் கொண்டிருந்தேன். இந்தக் கதையை தயாரிப்பாளரிடம் சொன்ன போது, ...