
துரிதம் – இயக்குநர் ஹெச். வினோத்தின் சீடர் இயக்கிய படம்
இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை. ஆனால் முதன்முறையாக அந்தக் குறையைப் போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் ‘துரிதம்’.
இயக்குநர் ஹெச்.வினோத்தின் சீடர் இயக்குநர் சீனிவாசன் துரிதம் படத்தை இயக்கியுள்ளார்.
'சண்டியர்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெகன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் வென்ற ஈடன் நடித்துள்ளார். கதாநாயகியின் தந்தையாக இயக்குநர் ஏ.வெங்கடேஷ், நாயகனின் நண்பனாக பாலசரவணன் மற்றும் பூ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார்.
புதியவரான நரேஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் மில்டனின் உதவியாளராகப் பணியாற்றிய வாசன் என்பவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை நாகூரான் கவனிக்க, ஆக்சன் காட்சிகளை மணி என...